தக்கலை அருகே முகமத்தூர் என்ற இடத்தைச் சேர்ந்தவர் எல்பின் சஜிதா (33). இவர் சம்பவ தினம் கோவில்விளை என்ற பகுதியில் நடந்து செல்லும்போது, அதே பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் (40) என்பவர் எல்பின் சஜிதாவிடம் தவறாக நடக்க முயற்சி செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது தொடர்பாக தக்கலை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து கிருஷ்ணகுமாரை நேற்று கைது செய்தனர்.