தேங்காபட்டணம் பகுதியில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புதுக்கடை சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் என்பவருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவர் தலைமையில் போலீசார் தைவிடை என்ற பகுதியில் உள்ள முத்துவேல் (48) என்பவர் பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது, உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை 20 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுபோன்று இனயம் உடவிளை பகுதியில் சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளஸ்சிங் என்பவர் தலைமையிலான போலீசார் ஹனிபா (75) என்பவர் பெட்டிக்கடையில் சோதனையிட்ட போது, அங்கிருந்து 6 பாக்கெட் கணேஷ் புகையிலை பறிமுதல் செய்தனர். போலீசார் இருவரையும் பறிமுதல் செய்த புகையிலை பொருட்களுடன் புதுக்கடை காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்தனர்.