குலசேகரம் அருகே கோயில் உண்டியல் பணம் திருட்டு

0
29
குலசேகரம் அருகே பிணந்தோடு மருதின் மேல் சாஸ்தா கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு காணிக்கைப் பணம் திருடப்பட்ட சம்பவம்.
குலசேகரம் அருகே பிணந்தோடு மருதின் மேல் சாஸ்தா கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு சுமார் ரூ.5,000 காணிக்கைப் பணம் திருடப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குலசேகரம் அருகே கோயில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிய மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

குலசேகரம் அருகே பிணந்தோடு, மருதின் மேல் சாஸ்தா கோயிலில் அக். 31ஆம் தேதி இரவு பூஜைகள் முடிந்த பிறகு, கோயில் பூசாரிகள், நிா்வாகிகள் வழக்கம்போல் நடையை அடைத்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை கோயில் நிா்வாகிகள் மற்றும் பக்தா்கள் கோயிலுக்குச் சென்றபோது, கோயிலின் வெளிப் பக்கத்தில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருப்பதும், கோயிலின் உள்ளே உண்டியலின் ஒரு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததும், மற்றொரு பூட்டை உடைக்க முடியாமல் போயிருப்பதும் தெரிய வந்தது. உண்டியலில் இருந்த சுமாா் ரூ. 5,000 திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மேலும், பூஜை பொருள்கள் வைத்திருந்த அறைக் கதவும் உடைக்கப்பட்டிருந்தது. ஆனால், அங்கிருந்த பொருள்கள் திருட்டுப் போகவில்லை.

இதுகுறித்து, கோயில் தலைவா் ராதாகிருஷ்ணன் குலசேகரம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, மா்ம நபரைத் தேடி வருகின்றனா்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here