எஸ்.ஜே.சூர்யா படத்தின் படப்பிடிப்பில் சிலிண்டர் வெடித்து தொழில்நுட்ப கலைஞர் உயிரிழப்பு

0
28

எஸ்​.ஜே.சூர்​யா​வின் புதிய படத்​தின் படப்​பிடிப்​பின் போது, சிலிண்டர் வெடித்து தொழில்​நுட்ப கலைஞர் உயி​ரிழந்​தார். திரைப்பட இயக்​குநரும், நடிகரு​மான எஸ்​.ஜே.சூர்​யா, 10 வருடங்​களுக்கு முன்பு ‘இசை’ என்ற படத்தை இயக்கி நடித்​திருந்​தார்.

இப்​படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெறாத​தால், அதற்கு பிறகு நடிப்​பில் மட்​டும் கவனம் செலுத்த தொடங்​கி​னார். தற்​போது, அவர் ‘கில்​லர்’ என்ற படத்தை இயக்கி நடிக்​கிறார். இதில், ப்ரீத்தி அஸ்​ராணி நாயகி​யாக நடிக்​கிறார்.

ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறு​வனத்​துடன் இணைந்​து, ஏஞ்​சல் ஸ்டுடியோஸ் தயாரிக்​கிறது. இப்​படத்​தில், காருக்கு முக்​கி​யத்​து​வம் இருப்​ப​தால், ஜெர்​மனியி​லிருந்து புதிய பிஎம்​டபிள்யூ கார் இறக்​குமதி செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழ், தெலுங்​கு, இந்தி உள்பட 5 மொழிகளில் உரு​வாகும் இந்​தப் படத்​துக்​காக சென்​னை, பெரம்​பூரிலுள்ள பின்னி மில்​லில் செட் அமைத்து படப்​பிடிப்பு நடந்து வரு​கிறது.

இந்​நிலை​யில், நேற்று அதி​காலை 3.30 மணி​யள​வில் நெருப்பு வளை​யத்​துக்​குள் நின்று சண்​டை​யிடு​வது போன்ற காட்​சியை படமாக்​கு​வதற்​காக பெரிய சிலிண்​டரிலிருந்து மற்​றொரு சிறிய சிலிண்​டருக்கு கார்​பன் டை ஆக்​சைடு வாயுவை பணி​யாளர்​கள் மாற்​றிக் கொண்​டிருந்​தனர்.

அப்​போது, பயங்கர சத்​தத்​துடன் சிலிண்​டர் வெடித்​தது. 10-க்கும் மேற்பட்டோர் காயம் இதில், தொழில்​நுட்ப கலைஞ​ராக பணி​யாற்றி வந்த மதுர​வாயலை சேர்ந்​தவர்​களான மதன் (25), சூர்யா (23), நெற்​குன்​றம் தினகரன் (24), குன்​றத்​தூர் சக்​திவேல் (27), உத்​திரபிரதேசத்தை சேர்ந்த ராம் பாண்டே (34) ஆகியோர் படு​கா​யம் அடைந்​தனர். பத்​துக்​கும் மேற்​பட்​டோருக்கு சிறிய அளவில் காயங்​கள் ஏற்​பட்​டன.

இவர்​களில் படு​கா​யம் அடைந்த 5 பேர் ராஜீவ் காந்தி அரசு மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். அங்கு சிகிச்சை பலனின்றி மதன் உயி​ரிழந்​தார். 4 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்த விபத்து தொடர்​பாக, ஓட்​டேரி காவல் நிலைய போலீ​ஸார் வழக்​குப் பதிந்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here