அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட பென்ஷன் திட்டத்தை உடனே அமல்படுத்த ஆசிரியர் கழகம் வேண்டுகோள்

0
32

அரசு ஊழியர்​கள் மற்​றும் ஆசிரியர்​களுக்கு தமிழ்​நாடு உறு​தி​யளிக்​கப்​பட்ட பென்​ஷன் திட்​டத்தை உடனே அமல்​படுத்​தும் வகை​யில் விதி​முறை​களை வெளி​யிட வேண்​டும் என்று அரசு கல்​லூரி ஆசிரியர் கழகம் வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது.

இது தொடர்​பாக அரசு கல்​லூரி ஆசிரியர் கழக பொதுச்​செயலர் சோ.சுரேஷ் நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தமிழகத்​தில் கடந்த 1.4.2003 முதல் செயல்​படுத்​தப்​பட்டு வந்த பங்​களிப்பு ஓய்​வூ​திய திட்​டத்​துக்கு எதி​ராக அரசு ஊழியர்​களும், ஆசிரியர்​களும் தொடர்ந்து போராடி வந்​தனர்.

இதன் விளை​வாக, கடந்த திமுக அரசு, அரசு ஊழியர் ஆசிரியர் சங்​கங்​களிடம் பேச்​சு​வார்த்தை நடத்தி, 9.1.2026 அன்று ஓர் அரசாணை (எண் 7) மூலம், தமிழகத்​தில் 01.01.2026-க்கு பிறகு ஓய்வு பெறு​பவர்​களுக்கு தமிழ்​நாடு அரசு உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என அறி​வித்​தது.

இதன் மூலம், அரசு ஊழியர்​கள் கடைசி​யாக பெற்ற அடிப்​படைச் சம்​பளம் மற்​றும் அகவிலைப்​படி​யில், 50 சதவீதம் ஓய்​வூ​தி​ய​மாக வழங்​கப்​படும். குடும்ப ஓய்​வூ​தி​யம் 60 சதவீதம் வழங்​கப்​படும். பணிக்​கொடை மூல​மாக அதி​கபட்​ச​மாக ரூ.25 லட்​சம் வழங்​கப்​படும் என அறிவிக்​கப்​பட்​டது.

அரசு ஊழியர் ஆசிரியர் சங்​கங்​கள் பெரும்​பகு​தி​யினர் இத்​திட்​டத்தை தற்​காலிக​மாக ஏற்​றுக் கொண்​டாலும், ஓய்​வூ​தி​யத்​துக்​காக ஊழியர்​களிட​மிருந்து 10 சதவீதம் பிடிக்​கக்​கூ​டாது, ஏற்​கெனவே பிடித்த தொகை​யை​யும் திருப்​பிக் கொடுக்க வேண்​டும் என கோரிக்கை வைத்​தனர்.

இருப்​பினும், உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்த விதி​களும், சட்ட ரீதி​யான மற்​றும் கணக்​கியல் தேவை​களும் வெளி​யிடப்​பட்ட பின்பு 1.1.2026 முதல் இத்​திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என அந்த அரசாணை​யில் தெரிவிக்​கப்​பட்டு இருந்​தது.

சட்​டப்​பேரவை தேர்​தல் அறிவிக்​கப்​படும் வரை திமுக அரசு, உறு​தி​யளிக்​கப்​பட்ட பென்ஷன் திட்​டத்​துக்​கான விதி​களை வெளி​யிட​வில்​லை. தற்​போது புதி​தாக பொறுப்​பேற்ற அரசும் இது​வரை உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​திய திட்​டத்​திற்​கான விதி​முறை​களை வெளி​யிட​வில்​லை.

தமிழ்​நாடு வெற்​றிக்​கழகம் தனது தேர்​தல் அறிக்​கை​யில், அரசு ஊழியர்​களுக்கு பழைய ஓய்​வூ​தி​யத் திட்​டம் அமல்​படுத்​தப்​படும் என குறிப்​பிட்​டிருப்​ப​தால், உடனடி​யாக பழைய பென்​ஷன் திட்​டம் வழங்​கு​வதற்​கான நடை​முறை​களை தொடங்க வேண்​டும்.

அது​வரை, ஏற்​கெனவே, ஓய்வு பெற்​றவர்​களுக்​கு, உடனே உறு​தி​யளிக்​கப்​பட்ட ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை அமல்படுத்​து​வதற்​கான விதி​களை வெளி​யிட வேண்​டும் என்று அவர்​ கூறி​யுள்​ளார்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here