நாகர்கோவிலில் தமிழ்நாடு அரசு கூட்டுறவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து பணியிடங்களுக்கும் பதவி உயர்வு, கலந்தாய்வு முறையில் மண்டல ஒதுக்கீடு, 6 மணிக்கு மேல் காணொளி ஆய்வு கூட்டங்களை தவிர்த்தல், 20 கோடிக்கு மேல் கடன் நிலுவை உள்ள சங்கங்களுக்கு மேலாண்மை இயக்குனர் பணியிடம் உருவாக்குதல், முதல்வர் மருந்தகங்களுக்கு கூட்டுறவு சார்பதிவாளர்களை பயன்படுத்தாமல் இருத்தல், தாயுமானவர் திட்டத்தை அவசரமாக செயல்படுத்த அழுத்தம் கொடுப்பதை தவிர்த்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் பிரித்வி ராஜ் தலைமையில், செயலாளர் சபரீஷ் மற்றும் நிர்வாகிகள் கண்டன கோஷங்களை எழுப்பினர்.