Home உலக செய்திகள் அமெரிக்கா உடனான பேச்சு இடைநிறுத்தம்: லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் எதிர்ப்பு

அமெரிக்கா உடனான பேச்சு இடைநிறுத்தம்: லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு ஈரான் எதிர்ப்பு

0

லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடனான அமைதி பேச்சினை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

மேற்காசியாவில் நிலவும் போர் சூழலை அமெரிக்கா மற்றும் ஈரான் தரப்பு பேச்சுவார்த்தை மூலம் சுமூக தீர்வு காண்பதற்கான முயற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பும் போர் நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

இந்த சூழலில் மத்தியஸ்தர்கள் மூலம் இரு தரப்பும் அமைதி ஒப்பந்தம் மேற்கொள்ள முயற்சித்து வருகின்றன. அது தொடர்பாக இரு தரப்பும் பல்வேறு நிபந்தனைகளை முன்வைத்து வருகின்றன. இருப்பினும் இதுவரை ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. அதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

இந்த சூழலில் லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா உடன் மத்தியஸ்தர்கள் மூலம் மேற்கொள்ளும் அமைதி பேச்சுவார்த்தையை இடைநிறுத்தி உள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. இதை ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை உடன் தொடர்பு கொண்டார் TANSIM செய்தி நிறுவனம் உறுதி செய்துள்ளது.

முன்னதாக, ஈரான் மீது கடந்த வாரம் அமெரிக்க தாக்குதல் நடத்தியது. இந்தியா இரண்டு தரப்பு உறுதி செய்தன. மேலும், அமெரிக்கா போர் நிறுத்த அத்துமீரத்தில் ஈடுபட்டதாக ஈரான் அதை கண்டித்தது.

கடந்த பிப்.28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் இணைந்து கூட்டு தாக்குதல் மேற்கொண்டன. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் மேற்காசியாவில் போர் மூண்டது. போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஏப்.9-ம் தேதி அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து இருதரப்பும் அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. இருப்பினும் இந்த விவகாரம் இன்னும் இறுதி கட்டத்தை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version