நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

0
7

நீட் முதுநிலை மருத்துவ சேர்க்கை குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்​கல் செய்ய மத்​திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்​தர​விட்​டுள்​ளது.

நீட் பிஜி 2025-26 கல்வி ஆண்​டுக்​கான சேர்க்​கை​யில் தகுதி மதிப்பெண் சதவீதத்​தைக் குறைத்து மத்​திய அரசு அறிவிப்பாணையை வெளி​யிட்​டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்​தில் மேல்​முறை​யீட்டு மனுக்​கள் தாக்​கல் செய்யப்பட்டுள்​ளன.

இந்தசூழலில் நீட் முது​நிலை மருத்​துவ சேர்க்கையை ஆய்வுசெய்து சீரமை்க்க சுகா​தா​ரப் பணி​கள் தலைமை இயக்குநர் தலை​மையி​லான 12 உறுப்​பினர்​கள் கொண்ட உயர்நிலை நிபுணர் குழுவை மத்​திய அரசு நியமித்து உள்​ளது. இதனிடையே நீட் முது​நிலை மருத்​துவ சேர்க்கை தொடர்​பான வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் பி.எஸ். நரசிம்மா மற்​றும் அலோக் அராதே அமர்வு முன்பு விசா​ரணைக்கு வந்​தது.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி​கள், “மருத்​து​வக் கல்​விச் சேர்க்கை முறையை ஆய்வு செய்​யும் நிபுணர் குழு​வின் பரிந்​துரைகள் மிக முக்​கிய​மானது என்​ப​தால் மத்​திய அரசுக்கு அறிக்கை தாக்​கல் செய்ய அவகாசம் அளிக்​கப்​படு​கிறது. நிபுணர்குழு​் அறிக்​கையை 3 வாரங்​களுக்​குள் மத்​திய அரசு தாக்கல் செய்ய வேண்​டும்​” என்​று உத்​தர​விட்​டனர்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here