எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் மம்தா – திமுக, பிஜேடி, ஆம் ஆத்மி தலைவர்களை சந்தித்து பேச திட்டம்

0
7

மேற்கு வங்​கத்​தில் ஆட்​சியை இழந்த மம்தா பானர்ஜி, எதிர்க்​கட்​சிகளை ஒன்​றிணைக்​கும் முயற்​சி​யில் இறங்கியுள்​ளார். இதற்​காக, திமுக தலை​வர் ஸ்டா​லின், பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தலை​வர் நவீன் பட்​நாயக் மற்​றும் ஆம் ஆத்மி​யின் அர்​விந்த் கேஜ்ரி​வால் ஆகியோரை சந்​தித்து பேசத் திட்ட​மிட்​டுள்​ளார்.

எதிர்​கட்​சிகளை ஒன்​றிணைக்​கும் முயற்​சி​யில் மம்தா இறங்கியுள்ளார். இண்​டியா கூட்​ட​ணியி​லிருந்து பிரிந்த திமுக மற்றும் ஆம் ஆத்மி கட்​சிகளை மீண்​டும் சேர்ப்​பது அவரது நோக்கமாக உள்​ளது. ஒடிஸா​வில் பிஜேடியை​யும் சேர்க்க மம்தா முயற்​சிக்​கிறார்.

தேசிய அளவில் பாஜகவை எதிர்த்து ஒன்​றிணைய விரும்​பும் பல கட்​சிகள், தங்​கள் சொந்த மாநிலங்​களில் ஒரு​வருக்​கொரு​வர் எதிர் எதி​ராகத் தேர்​தலில் போட்​டி​யிடும் சூழல் நில​வு​கிறது.

இண்டியா கூட்​ட​ணியி​லிருந்து வெளி​யேறிய அர்​விந்த் கேஜ்ரி​வால் தொடக்​கம் முதலே மம்​தாவுடன் நட்​பில் உள்​ளார். இதனால், அவரை இழுப்​பது பெரிய காரியமல்ல என மம்தா எண்​ணுகிறார். பிஜேடி கடந்த காலத்​தில் தனித்து செயல்​பட்டு வந்​துள்​ளது. ஆனால், அதன் தலை​வர் நவீன் பட்​நாயக்​குடன் மம்​தாவுக்கு நல்ல நட்​புறவு உள்​ளது. இதனால் அவரை​யும் கூட்​ட​ணி​யில் சேர்க்க முடியும் என்று நம்​பு​கிறார் மம்​தா.

ஆனால், எதிர்க்​கட்​சி​யினரும் பாஜக​வும் திமுக-​வின் நகர்​வு​களை உன்​னிப்​பாகக் கவனித்து வரு​கின்​றனர். தமிழக முதல்​வர் விஜய்க்கு காங்​கிரஸ் ஆதரவு அளித்​த​தால் திமுக​வுக்கு காங்​கிரஸ் எதிரி​யானது. எனினும், தேசிய விவ​காரங்​களில் ஒன்​றிணைந்து செயல்​படு​வது சாத்​தி​யம் என மம்தா கருதுகிறார். இதைப்பற்றி விரி​வாகப் பேச மம்தா விரை​வில் தமி்ழகம் வந்து மு.க.ஸ்டாலினை சந்​திக்க திட்​ட​மிட்​டுள்​ளார்.

சென்​னை​யில் நடை​பெற்ற இண்​டியா கூட்​டணி கூட்​டத்​தில் முதல்வர் விஜய்​யின் தவெக​வும் கலந்து கொண்​டது. இச்​சூழலில், தனது முக்​கிய எதிரி​யாகக் கருதும் தவெக உள்ள அணி​யில்​ தி​முக வருமா? என்​ற கேள்​வி​யும்​ எழுந்​துள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here