சென்னை உள்ளிட்ட 4 நகரங்களில் பேரியம் குறைந்த பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

0
28

டெல்லி, சென்னை, போபால், கொல்கத்தா ஆகிய நான்கு நகரங்​களில் பேரி​யம் குறைக்​கப்​பட்ட நவீன பட்டாசுகளை வெடித்து சோதிக்க உச்ச நீதிமன்றம் அனு​மதி வழங்​கி​யுள்​ளது. சோதனை முடிவு​களை மூன்று வாரங்​களில் தாக்கல் செய்​யு​மாறு மத்திய அரசுக்கு உத்​தர​விட்​டது.

நாடு முழு​வதும் பட்​டாசுக்கு தடை விதிக்​கக் கோரி அர்​ஜுன் கோபால் என்​பவர் தொடர்ந்த வழக்கு உச்ச நீதி​மன்​றத்​தில் விசாரிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலையில் பல்​வேறு மாநிலங்களில் பட்​டாசு ஆலை உரிமம், விற்​பனை உரிமம் ரத்து செய்​யப்​பட்​டதை எதிர்த்​தும் ஆலை உரிமை​யாளர்கள், விற்​பனையாளர்​கள் சங்​கம் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்தில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுக்​கள் உட்பட பல்​வேறு மனுக்​கள் உச்ச நீதிமன்றத்​தில் நீதிப​தி​கள் எம்​.எம்​.சுந்​தரேஷ், பிரசன்னா.பி.வராலே ஆகியோர் அடங்கிய அமர்​வில் விசாரணைக்கு வந்​தன.

அப்​போது உற்​பத்​தி​யாளர்​கள் மற்​றும் விற்​பனை​யாளர்​கள் தரப்பில் பட்​டாசு தயாரிப்​பு, விற்​பனை மற்​றும் வெடிப்​பது தொடர்பாக சில தளர்​வு​கள் அளிப்​பதை உச்ச நீதி​மன்​றம் கருத்தில் கொள்ள வேண்​டும் என்று கோரிக்கை வைக்​கப்​பட்​டது. அதே​நேரம், பேரி​யம் குறைந்த பட்​டாசுகளுக்​கான ஆய்​வகச் சோதனை​கள் வெற்​றிகர​மாக முடிந்​துள்​ள​தாக​வும், நேரடி வெடிப்புச் சோதனைக்கு வெடிபொருள் கட்​டுப்​பாட்டு அமைப்​பு, மத்​திய மாசுக் கட்​டுப்​பாட்டு வாரி​யம் ஒப்​புதல் அளித்துள்ளதாகவும் மத்​திய அரசு தெரி​வித்​தது.

125 டெசிபலுக்​குக் குறை​வான ஒலி​யுள்ள பட்​டாசுகளை அனுமதிக்கலாம் என தேசிய சுற்​றுச்​சூழல் பொறி​யியல் ஆராய்ச்சி நிறு​வனம் பரிந்​துரைத்​ததை​யும் நீதி​மன்​றத்​தில் தெரிவித்​தது. இதை ஏற்ற நீதிப​தி​கள் அமர்​வு, டெல்​லி, சென்​னை, போபால், கொல்​கத்தா ஆகிய நான்கு நகரங்​களி​லும் பேரி​யம் குறைக்​கப்​பட்ட நவீன பட்​டாசுகளை வெடித்து சோதிக்க அனு​மதி அளித்​து, அறிக்​கையை மூன்று வாரங்​களில் தாக்​கல் செய்​யு​மாறு உத்​தர​விட்​டு வழக்கை ஒத்திவைத்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here