Home கன்னியாகுமரி செய்திகள் ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று; குமரியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

ஆடி மாதத்தில் வீசும் பலத்த காற்று; குமரியில் காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

0

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆடி மாதத்தையொட்டி பலத்த சூரைக்காற்று வீசி வருவதால் ஆரல்வாய்மொழி மற்றும் முப்பந்தல் பகுதிகளில் உள்ள காற்றாலைகளில் மின் உற்பத்தி இரண்டு மடங்கு வரை அதிகரித்துள்ளது.

வழக்கமான மாதங்களை விட காற்று தீவிரமாகவும், அதிக வேகமாகவும் வீசுவதால் 250 முதல் 750 கிலோ வாட் திறன் கொண்ட காற்றாலைகளில் மின் உற்பத்தி 3 ஆயிரம் முதல் 8 ஆயிரம் யூனிட் வரை உயர்ந்துள்ளது. எனினும், அவ்வப்போது பெய்து வரும் மழை காரணமாக மின் உற்பத்தியில் சிறு ஏற்றத்தாழ்வுகள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version