குமரி மாவட்டத்தில் இன்று 8ம் தேதி முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் மக்கள் தொடர்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி 38வது வார்டுக்கு கோட்டார் எம்டிபி மஹால், குழித்துறை நகராட்சி வார்டுகள் 18, 19, 20, 21 மார்த்தாண்டம் ஆனி ஆடிட்டோரியம், வில்லுக்குறி பேரூராட்சி 9 முதல் 15 வார்டுகளுக்கு வி டி பி திருமண மண்டபம், ரீத்தாபுரம் 1 முதல் 9 வார்டுகளுக்கு ஷாஜன் மஹால், தூத்தூர் ஊராட்சிக்கு புனித தோமஸ் சமூக நலக்கூடம், பள்ளந்துறை ஊராட்சிக்கு மொசனிக் நகர் லார்ட்ஸ் ஆப் இந்தியா ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடைபெறுகின்றன.














