மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் மாசி கொடை மார்ச் மாதம் 2ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை கோயில் நிர்வாகம் மற்றும் துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்த தலையில் மாவட்ட கலெக்டர் அழகு மீனா, காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின், துறை அலுவலர்களுடன் பக்தர்களுக்கு செய்து வரும் பாதுகாப்பு மற்றும் வசதிகளை குறித்து நேற்று (பிப்ரவரி 27) கேட்டறிந்தனர்.
இதில் சப் கலெக்டர் வினுகுமார் மீனா, குளச்சல் ஏஎஸ்பி பிரவீன் கவுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கலெக்டர் கூறுகையில், – மண்டைக்காடு கோயிலில் வரும் பக்தர்களுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும்,
கழிவறைகளில் தண்ணீர் தட்டுப்பாடு இன்றி இருக்க வேண்டும், பொங்கலிடும் பகுதியில் தீயணைப்பு வீரர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் வழங்கி, மேலும் கடலில் நீராடும் பக்தர்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கூறினார்.
பின்னர் அவர் பொங்கலிடும் பகுதி, பெண் பக்தர்கள் குளிக்கும் ஏவிஎம் கால்வாய் பகுதி, கடற்கரை பகுதி ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.