Home கன்னியாகுமரி செய்திகள் வெள்ளிச்சந்தை: பைக் மோதி மூதாட்டி படுகாயம்

வெள்ளிச்சந்தை: பைக் மோதி மூதாட்டி படுகாயம்

0

வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஆளூர் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல் மனைவி சொர்ணம் (70). இவர் சம்பவ தினம் தனது மகளை திருமணம் செய்து கொடுத்த ஊரில் நடந்த திருவிழாவைப் பார்க்கச் சென்றார். பின்னர் நேற்று அவர் ஊருக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். வெள்ளிச்சந்தை – வெள்ளமோடி சாலையில் செல்லும்போது, சொர்ணம் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அந்த நேரம் அந்த வழியாக வந்த பைக் சொர்ணம் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் மீட்டு ராஜா கமங்கலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் பைக்கை ஓட்டி வந்த ஈசன்தங்கைச் சேர்ந்த சுயம்புலிங்கம் (45) என்பவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version