Home கன்னியாகுமரி செய்திகள் பத்துகாணி: வன பகுதியில் மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை

பத்துகாணி: வன பகுதியில் மக்களை அச்சுறுத்தும் ஒற்றை யானை

0

குமரி மாவட்டம் பத்துகாணி வனப் பகுதியில் கடந்த வாரம் ஒரு பழங்குடி கிராமத்தில் ஒரு காட்டு யானை புகுந்து முண்டன்காணி என்பவர் வீட்டின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அதே பகுதியில் கற்றுவா என்ற பழங்குடி குடியிருப்பு பகுதியில் ஒரு காட்டு யானை புகுந்து மாதவன் காணி என்பவரது வீட்டுக் கதவை தட்டி உள்ளது. யானை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவர்கள் யானையை விரட்ட வீட்டில் இருந்த பாத்திரங்களை தட்டி சத்தம் எழுப்பி அதை துரத்தினர். இந்த நிலையில் நேற்று மீண்டும் அந்த யானை மறுபடியும் தேடி வந்து கதவை தட்டி உள்ளது. இதனால் பயத்தில் உறைந்த மாதவன் காணி குடும்பத்தினர் சத்தம் போட்டனர். இதை அடுத்து அந்த யானை சிறிது நேரம் அங்கே நின்று விட்டு, விளை நிலத்துக்குள் சென்று புகுந்தது. குடியிருப்பு பகுதிகளில் புகுந்து ஒற்றை யானை தொடர்ந்து அச்சுறுத்தி வரும் இந்த சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வனத்துறையினர் கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version