க்ரைம் த்ரில்லர் கதையில் ‘மவுனம்’!

0
220

கன்னடப் பட இயக்குநர் ஏ.மகேஷ் குமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம், ‘மவுனம்’.

அபிராம் வர்மா, ஜேஎஸ்ஆர் ரித்திக், சுமன் உள்பட பலர் இதில் நடிக்கின்றனர். சாம் மணிகண்டன் இசை அமைக்கிறார். மேஜிக் மக் மூவிஸ் தயாரிக்கும் இந்த க்ரைம் த்ரில்லர் படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் உருவாகிறது. அக். 20-ல் இதன் படப்பிடிப்பு தொடங்குகிறது. 60 நாட்களில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

“கரோனா காலக்கட்டத்தில் நடக்கும் கதை இது. சாப்ட்வேர் என்ஜினீயரான நாயகனைத் தேடி அவருடைய முன்னாள் காதலி வருகிறார். அவர் வீட்டில் தங்கியிருக்கும் காதலி, அதிகாலையில் படுகொலை செய்யப்படுகிறார். இந்த கொலை எப்படி நடந்தது, பின்னணி என்ன என்பது கதை” என்று படக்குழு தெரிவித்தது. இதன் தொடக்க விழா சென்னையில் சமீபத்தில் நடந்தது. நடிகர் பார்த்திபன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here