கர்நாடக முதல்வர் பதவியில் இருந்து விலக மறுக்கும் சித்தராமையா – தீவிர ஆலோசனையில் டெல்லி தலைவர்கள்

0
16

கர்​நாடக முதல்​வர் பதவியை கைப்பற்ற டி.கே.சிவகு​மார் முயற்​சித்து வரும் நிலை​யில், டெல்லியில் கூட்​டத்​தில் சித்​த​ராமையா தனது பதவியை விட்டுத்தர மறுத்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

கர்​நாட​கா​வில் முதல்​வர் பதவியை டி.கே.சிவகு​மாருக்கு வழங்க வேண்​டும் என அவரது ஆதரவு எம்​எல்​ஏக்​கள் மீண்டும் போர்க்கொடி தூக்​கினர். இதையடுத்து காங்​கிரஸ் மேலிடம் ஆலோ​சனை நடத்​து​வதற்​காக டெல்​லிக்கு வரு​மாறு சித்தராமையா​வுக்​கும், டி.கே.சிவகு​மாருக்​கும் அழைப்பு விடுத்தது. இதையடுத்து இரு​வரும் டெல்​லிக்கு சென்​றனர்.

நேற்று மாலை​யில் டெல்​லி​யில் உள்ள‌ இந்​திரா பவனில் காங்கிரஸ் தேசி​யத் தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்கே தலைமையில் நடை​பெற்ற கூட்​டத்​தில் மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்​தி, பொதுச்​செய​லா​ளர் கே.சி.வேணு கோபால், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இது குறித்து காங்​கிரஸ் மேலிடத் தலை​வர்​கள் கூறும்போது, “முதல்​வர் பதவியை விட்​டுத் தரு​வது குறித்து சித்தராமையாவிடம் விவா​திக்​கப்​பட்​டது. அதற்கு அவர் சம்​மதம் தெரிவிக்​க​வில்​லை. மேலும் அவரிடம் மாநிலங்​களவை தேர்​தலில் போட்​டி​யிட்​டு, தேசிய அரசி​யலில் கவனம் செலுத்த வேண்​டும் எனவும் வலி​யுறுத்​தப்​பட்​டது. அது குறித்து அவர் யோசித்து முடிவெடுப்​ப​தாக கூறி​விட்​டார்.

இதையடுத்து டி.கே.சிவகு​மாரை சமாதானப்படுத்​தும் வகை​யில் அவ‌ருக்கு கூடு​தல் முக்​கி​யத்​து​வ​மும், அமைச்​சரவை மாற்​றத்​தில் அவரது ஆதர​வாள​ருக்கு முக்​கிய துறை​கள் ஒதுக்​கு​வது குறித்​தும் விவா​திக்​கப்​பட்​டது. இன்​னொரு​புறம் மல்​லி​கார்​ஜூன கார்கேவுக்கு முதல்​வர் பதவி வழங்​கலா​மா ? எனவும் விவாதிக்கப்பட்டது” என்றனர்.

இந்நிலையில் இன்றோ அல்லது நாளையோ முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலகுவார் என கட்சி மேலிட வட்டாரங்கள் தெரிவித்தன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here