3 மாதத்துக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கு சுற்றுலா: பிஹார் அரசு புதிய உத்தரவு

0
17

பிஹார் மாநிலத்​தில் உள்​ளூர் சுற்​றுலா உள் ​கட்டமைப்பை மேம்​படுத்​தும் நோக்​கில், அனைத்து மாநில அரசு அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள் 3 மாதங்​களுக்கு ஒரு​ முறை தங்களது குடும்​பத்​தினருடன் சுற்​றுலா செல்​வது கட்​டா​யம் என்று அம்​மாநில அரசு அதிரடி உத்​தரவு பிறப்​பித்​துள்​ளது.

இது குறித்து மாநில அரசின் பொது நிர்​வாகத் துறை வெளி​யிட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: பிஹார் மாநில அரசுத் துறை​களில் பணிபுரி​யும் அனைத்து அதி​காரி​கள் மற்​றும் ஊழியர்​கள், மூன்று மாதங்​களுக்கு ஒரு​ முறை தங்​களது சொந்த மாவட்​டத்​தைத் தவிர்த்​து, மாநிலத்​தில் உள்ள வேறு ஏதேனும் ஒரு மாவட்​டத்​திற்​குத் தங்​களது குடும்​பத்​தினருடன் இரண்டு நாட்​கள் (இரண்டு இரவு​கள் உட்​பட) சுற்​றுலாப் பயணம் மேற்​கொள்ள வேண்​டும்.

குறிப்​பாக வெள்​ளி, சனி இரவு​களில் தங்க வேண்​டும். இந்த இரண்டு நாள் தங்​குதலின் போது, அவர்​கள் தங்​கி​யிருக்​கும் பகுதிக்கு அரு​கில் அமைந்​துள்ள குறைந்​த​பட்​சம் மூன்று சுற்றுலாத் தலங்​களை​யா​வது நேரில் சென்று பார்​வை​யிட வேண்டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

பிஹாரில் உள்ள இயற்கை கிராமப் ​புற மற்​றும் சூழலியல் சுற்றுலா மையங்​களை அரசு ஊழியர்​களே முதலில் கண்​டறிந்து தங்​கு​வதன் மூலம், அங்​குள்ள உள்​கட்​டமைப்​பு​கள் மேம்படுவதோடு, உள்​ளூர் பொருளா​தா​ர​மும் வலு​வடை​யும் என்ற நோக்​கில் இந்த புது​மை​யான முயற்​சியை அம்​​மாநில அரசு கையில்​ எடுத்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here