கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் கிருஷ்ணா தலைமையில் அதிகாரிகள் இன்று நாகர்கோவில் பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். கலெக்டர் ஏற்கனவே தமிழில் பெயர் பலகை வைக்க உத்தரவிட்டிருந்த போதிலும், அதனை செயல்படுத்தாத 10 கடைகளுக்கு தலா ரூ. 2000 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கடை உரிமையாளர்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.