Home தேசிய செய்திகள் அசாமில் சிஆர்பிஎப் முகாமில் துப்பாக்கிச்சூடு: 2 வீரர் உயிரிழப்பு, சக வீரர்களை சுட்ட ஜவான் தற்கொலை

அசாமில் சிஆர்பிஎப் முகாமில் துப்பாக்கிச்சூடு: 2 வீரர் உயிரிழப்பு, சக வீரர்களை சுட்ட ஜவான் தற்கொலை

0

அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்​டத்​தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை முகாமில், சிஆர்பிஎஃப் வீரர் ஒரு​வர் தனது இரு சக வீரர்​களை சுட்​டுக் கொன்​று​விட்​டு, பின்​னர் தற்கொலை செய்து கொண்​டார். மேலும், மற்றொரு சிஆர்பிஎப் அதிகாரி இந்​தச் சம்​பவத்​தில் காயமடைந்​தார்.

அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்​டம் கட்​டி​மாரி​யில் மத்​திய ரிசர்வ் காவல் படை​யின் (சிஆர்பிஎஃப்) 34-வது பட்​டா​லியன் முகாம் அமைந்​து உள்​ளது. இங்கு நேற்று காலை 7 மணி அளவில், முகாமின் பிர​தான நுழை​வாயி​லில் பாது​காப்​புப் பணி​யில் இருந்த ஆந்​திரப் பிரதேசத்​தைச் சேர்ந்த, உதவி துணை ஆய்​வாளர் பல்லானி பிரேம​பாரம், தனது சக ஊழியர்​களை நோக்கி துப்பாக்கியால் சுட்​டுள்​ளார். இதில், சிஆர்​பிஎஃப் வீரர்​கள் விஷ்ணுபிர​சாத் பகேல், ராம்​ந​வால் சிங் யாதவ் ஆகியோர் உயிரிழந்​தனர்.

உதவி துணை ஆய்​வாளர் காயம்

உதவி துணை ஆய்​வாளர் மனே கோவிந்த் ஸ்ரீபுல் பலத்த காயமடைந்​தார். அவர் மேல் சிகிச்​சைக்​காக குவாஹாட்டி மருத்துவக் கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு மாற்​றப்​பட்​டார். இந்த சம்​பவத்​துக்​குப் பிறகு, பல்​லானி பிரேம​பாரம் முகாமில் உள்ள ஒரு படுக்​கையறைக்​குச் சென்று தன்​னைத்​தானே துப்​பாக்​கி​யால் சுட்டுக் கொண்டு உயி​ரிழந்​தார்​. இச்​சம்​பவத்​துக்​கான காரணம் குறித்​து, தீவிர வி​சா​ரணை நடை​பெற்​று வருகிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version