Home விளையாட்டு செய்திகள் 2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் விருப்பம்

2036-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்த இந்தியா உட்பட 7 நாடுகள் விருப்பம்

0

2036-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்​டியை நடத்​து​வதற்​கான உரிமையை பெற இந்​தி​யா, ஜெர்​மனி, ஹங்​கேரி, கத்​தார், தென் கொரி​யா, தென் ஆப்​பிரிக்​கா, துருக்கி ஆகிய 6 நாடு​கள் விருப்​பம் தெரி​வித்​துள்​ள​தாக சர்​வ​தேச ஒலிம்​பிக் கமிட்டி (ஐஓசி) தெரி​வித்​துள்​ளது. இந்த நாடு​கள் தங்​களது போட்டி நடத்​தும் திட்​டங்​களை வரும் நவம்​பர் மாதம் சர்​வ​தேச ஒலிம்​பிக் கமிட்​டி​யின் (ஐஓசி) எதிர்​கால போட்​டிகளை நடத்​தும் தேர்​வுக் குழு​விடம் சமர்ப்​பிக்க அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​தி​யா​வில் இது​வரை ஒலிம்​பிக் போட்டி நடை​பெற்​ற​தில்​லை. இந்​நிலை​யில், 2036-ம் ஆண்டு ஒலிம்​பிக் போட்​டியை நடத்​து​வதற்​கான இந்​தி​யா​வின் முக்​கிய தேர்​வாக அகம​தா​பாத் நகரம் அமைந்​துள்​ளது. போட்​டியை நடத்த விருப்​பம் தெரி​வித்து இந்​தியா கடந்த 2024-ம் ஆண்டே ஐஓசி​யிடம் தனது விருப்​பக் கடிதத்தை சமர்ப்​பித்​திருந்​தது.

ஒலிம்​பிக் போட்​டியை நடத்​தும் நகரங்​களைத் தேர்வு செய்​யும் நடை​முறை​யில் கடந்த ஜூன் மாதம் ஐஓசி புதிய நடை​முறையை அறி​முகப்​படுத்​தி​யது. இதன்​படி வரும் நவம்​பர் மாதம் நடை​பெறும் திட்ட விளக்க கூட்​டத்​துக்​குப் பிறகு புதிய நடை​முறை​கள் தொடங்​கும். இதைத் தொடர்ந்து 2028-ம் ஆண்டு எதிர்​கால போட்​டியை நடத்​தும் தேர்​வுக் குழு தனது அறிக்​கையை ஐஓசி உறுப்​பினர்​களிடம் சமர்ப்​பிக்​கும்.

அதன்​பின்​னர் 2029-ம் ஆண்டு மத்​தி​யில் ஐஓசி நிர்​வாகக் குழு, விருப்​பம் உள்ள நகரங்​களை தேர்வு செய்​து, அந்த பட்​டியலை வாக்​கெடுப்​புக்​காக ஐஓசி கூட்​டத்​தில் முன்​வைக்​கும். இந்த வாக்​கெடுப்​பில் வெற்றி பெறும் நாடே 2036 ஒலிம்​பிக்​ போட்​டியை நடத்​தும்​ வாய்ப்​பைப்​ பெறும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version