Home விளையாட்டு செய்திகள் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

0

தென் ஆப்​பி​ரிக்கா – வங்​கதேசம் அணிகள் இடை​யி​லான முதல் டெஸ்ட் கிரிக்​கெட் போட்டி ஜோகன்​னஸ்​பர்க்​கில் நடை​பெற்று வந்​தது. இதன் முதல் இன்​னிங்​ஸில் வங்​கதேசம் 400 ரன்​கள் குவித்​தது. இதையடுத்து விளை​யாடிய தென் ஆப்​பி​ரிக்க அணி 124.1 ஓவர்​களில் 557 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது.

அதி​கபட்​ச​மாக மார்க்​கஸ் ஆக்​கர்​மேன் 157, ரியான் ரிக்​கெல்​டன் 102, ஜுபைர் ஹம்சா 83, காகிசோ ரபாடா 72 ரன்​கள் விளாசினர். 157 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய வங்​கதேச அணி 4-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 34.2 ஓவர்​களில் 5 விக்​கெட்​கள் இழப்​புக்கு 100 ரன்​கள் எடுத்​தது.

முஸ்பிகுர் ரகிம் 5, லிட்​டன் தாஸ் 12 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர். நேற்று கடைசி நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய வங்​கதேச அணி சைமன் ஹார்​மரின் சுழற்​பந்து வீச்சை தாக்​குப்​பி​டிக்க முடி​யாமல் 55.3 ஓவர்​களில் 168 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது.

முஸ்பிகுர் ரகிம் 22, லிட்​டன் தாஸ் 39, மெஹிதி ஹசன் மிராஸ் 15, ஹசன் மஹ்​மூத் 4, எபாதத் ஹொசைன் 0 ரன்​களில் நடையை கட்​டினர். தென் ஆப்​பி​ரிக்க அணி தரப்​பில் சைமன் ஹார்​மர் 12.3 ஓவர்​களை வீசி ஒரு மெய்​டனுடன் 51 ரன்​களை விட்​டுக்​கொடுத்து 6 விக்​கெட்​களை வீழ்த்​தினார். ரபாடா 3 விக்​கெட்​களை கைப்​பற்​றினார்.

இதையடுத்து 12 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பி​ரிக்க அணி 1.3 ஓவர்​களில் ஒரு விக்​கெட்டை மட்​டும் இழந்து வெற்றி பெற்​றது. மார்க்​ரம் 8 ரன்​கள் சேர்த்​தார். மார்க்​கஸ் ஆக்​கர்​மேன் ரன் ஏதும் எடுக்​காமல் ஆட்​ட​மிழந்​தார். 9 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பி​ரிக்க அணி 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்​னிலை வகிக்​கிறது. 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் போட்டி வரும் 23-ம் தேதி செஞ்​சூரியன் நகரில் தொடங்​கு​கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version