அதிமுக கொறடாவின் போனில் பேசிய சேகர்பாபு: வைரலான வீடியோவால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

0
27

தமிழக சட்​டப்​பேரவை வளாகத்​தில் திமுக – அதி​முக நிர்​வாகி​கள் இடையே நடந்த நிகழ்வு அரசி​யல் அரங்​கில் விவாதப் பொருளாக மாறி​யுள்​ளது.

சட்​டப்​பேர​வை​யில் நடை​பெற்​று​வரும் பட்​ஜெட் மானியக் கோரிக்கை மீதான விவாதத்​தில் பங்​கேற்​ப​தற்​காக நேற்று காலை முதலே எம்​எல்​ஏக்​கள் அவைக்கு வருகை தந்​தனர். அப்​போது, திமுக எம்​எல்ஏ சேகர்​பாபு​வும், அதி​முக கொற​டா​வான அக்ரி கிருஷ்ண​மூர்த்​தி​யும் ஒன்​றாக நடந்து வந்​தனர்.

யாரிடமோ செல்​போனில் பேசிக்​கொண்டே வந்த அக்ரி கிருஷ்ண​மூர்த்​தி, திடீரென தனது போனை சேகர்​பாபு​விடம் நீட்​டி​னார். சேகர்​பாபு​வும் செல்​போனை வாங்கி சிரித்த முகத்​துடன் பேசி​யபடியே உள்ளே சென்​றார்.

இந்த காட்சி சமூக வலை​தளங்​களில் வேக​மாகப் பரவி, பேசுபொருளாக மாறி​யுள்​ளது. தமிழக அரசி​யலிலும், சட்​டப்​பேர​வைக்​குள்​ளும் தீவிர அரசி​யல் எதிரி​களாக மோதிக்​கொள்​ளும் பிர​தான கட்​சிகளின் நிர்​வாகி​கள், வெளியே காட்​டிய இந்த இணக்​க​மான சூழல் பல்​வேறு கேள்வி​களை எழுப்​பி​யுள்​ளது.

போனில் சேகர்​பாபு யாருடன் பேசி​யிருப்​பார், அது அதி​முக மேலிடத் தலை​வரா அல்​லது துறை​சார்ந்த விவ​காரமா என்​பது குறித்து அரசி​யல் விமர்​சகர்​கள் மற்​றும் நெட்​டிசன்​கள் மத்​தி​யில் பல்​வேறு யூகங்​களும் விவாதங்​களும் எழுந்​துள்​ளன.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here