Home உலக செய்திகள் 14 இந்தியர்களுடன் சென்ற படகை தாக்கிய சவுதி அரேபியா

14 இந்தியர்களுடன் சென்ற படகை தாக்கிய சவுதி அரேபியா

0

செங்கடலில் உள்ள சுகார் தீவு அருகே 14 இந்தியர்கள் பயணித்த படகை சவுதி அரேபியா தாக்கியதாக, ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், “செங்கடலில் 14 இந்தியர்களை ஏற்றிச் சென்ற இந்தியப் படகு, சுகார் தீவு அருகே சவுதி எதிரியால் (சவுதி அரேபியா) தாக்கப்பட்டுள்ளது. ஏமன் ஆயுதப் படையினர் அவர்களை மீட்டுள்ளனர். இதுதொடர்பான கூடுதல் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும்.

சவுதி எதிரியின் இந்தப் பொறுப்பற்ற செயல், செங்கடலில் சர்வதேச கப்பல் போக்குவரத்துக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இதுபோன்ற பொறுப்பற்ற செயல்களில் ஈடுபடுவதை சவுதி தரப்பு நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version