உ.பி. தேர்தலில் மீண்டும் சமாஜ்வாதி – காங்கிரஸ் கூட்டணி; இரு கட்சிகளுடன் சேர மறுக்கும் மாயாவதி

0
22

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் கட்சியுடன் நெருக்கமாக முடிவு செய்துள்ளார்.

சமாஜ்வாதியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும் விரும்புகிறார். இதனால், உ.பி. தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கூட்டணி அமைய நிறைய வாய்ப்புகள் உள்ளன. இவ்​விரு கட்​சிகளும் கடந்த 2017 சட்​டப்​பேர​வைத் தேர்தலில் கூட்​டணி அமைத்​தன. ஆனால், குறிப்​பிடத்​தக்க வெற்றி கிடைக்​க​வில்​லை. எனினும், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் மீண்டும் கூட்​டணி அமைத்து போட்​டி​யிட்​டன.

இதில், உ.பி.​யில் ஆளும் பாஜகவை வெற்​றிகர​மாக வீழ்த்​தி, சமாஜ்வாதி 37, காங்​கிரஸ் 6 எம்​.பி.க்​களைப் பெற்​றன. உ.பி.​யில் மொத்தம் உள்ள 80 மக்​கள​வைத் தொகு​தி​களில் பாஜக 33, அதன் கூட்டணிக் கட்​சிளுக்கு 3 இடங்​கள் கிடைத்​தன. பாஜக 41.37 சதவீத வாக்​கு​கள் பெற்​றது. சமாஜ்​வாதி 33.59 மற்​றும் காங்​கிரஸ் 9.46 சதவீத வாக்​கு​கள் பெற்​றன.

பாஜகவை விட சமாஜ்​வா​தி​யும், காங்​கிரஸும் அதிக வாக்குகளைப் பெற்​ற​தால் சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் மீண்​டும் இணைய இரு கட்​சிகளும் ஆர்​வம் காட்​டு​கின்​றன. இதுகுறித்து அகிலேஷ் கூறும்​போது, ”2027 தேர்​தலிலும் கூட்​ட​ணிக் கட்சிகளுடனான இணக்​கம் தொடரும். அப்​போது முக்​கியக் கேள்வி வெற்​றி​யாகத் ​தான் இருக்​குமே தவிர தொகு​தி​கள் அல்​ல” என்​றார்.

மேலும், கூட்​ட​ணி​யில் மாயா​வ​தி​யின் பகுஜன் சமாஜ் கட்​சியை சேர்த்​தால், பாஜக.​விடம் இருந்து ஆட்​சியை பறித்து விடலாம் என்று அகிலேஷும் ராகுலும் கருதுகின்​றனர். இதையடுத்​து, 2 கட்சிகளின் சார்​பிலும் உ.பி.​யில் 5 முறை முதல்​வ​ராக இருந்த மாயா​வ​தியை சந்​திக்க 2 நாட்​களுக்கு முன்​னர் காங்​கிரஸ் தலைவர் மல்​லி​கார்​ஜுன கார்கே முயற்சி செய்​தார்.

உ.பி. பாராபங்கி எம்​.பி. தனுஜ் புனி​யா​வுடன் கட்​சி​யின் தலித் பிரிவு தலை​வர் ராஜேந்​தர் பால் கவுதம் உள்​ளிட்ட 4 பேரை கார்கே அனுப்பி வைத்​தார். ஆனால், லக்​னோ​வில் உள்ள மாயா​வதி வீட்டுக்கு சென்​றவர்​கள் ஒரு மணி நேரம் காத்​திருந்​தும் சந்​திக்க முடி​யாமல் திரும்​பினர். சட்​டப்​பேர​வைத் தேர்​தல் கூட்​டணி அமைப்​பது குறித்து மாயா​வ​திக்கு அகிலேஷ் ஏற்​கெனவே தகவல் அனுப்பி இருந்​தார்.

அதற்​கும் மாயா​வதி மறுப்பு தெரி​வித்து விட்​ட​தாகத் தகவல்​கள் வெளி​யானது. ஏனெனில், ”பகுஜன் சமாஜ் வாக்​கு​கள் கூட்​டணிக் கட்​சிகளுக்கு செல்​கின்​றன. ஆனால், கூட்​டணிக் கட்​சிகளின் (சமாஜ்​வா​தி, காங்​கிரஸ்) வாக்​கு​கள் பகுஜன் சமாஜ் கட்​சிக்கு கிடைப்​ப​தில்​லை” என்று மாயா​வதி வெளிப்​படை​யாகவே கருத்து தெரி​வித்​திருந்​தார்.

மாயா​வ​தி​யின் இந்​தக் கருத்தை முழு​மை​யாக ஏற்க முடி​யாது என்று ஒரு தரப்​பினர் கூறுகின்​றனர். தற்​போது மக்​களவை​யில் மாயா​வதி கட்​சிக்கு எம்​.பி.க்​கள் இல்​லை. ஆனால், 2019-ம் ஆண்டு சமாஜ்​வாதி கட்​சி​யுடன் கூட்​டணி வைத்து தேர்​தலைச் சந்தித்தபோது, 10 எம்​.பி.க்​கள் பகுஜன் சமாஜ் கட்​சிக்கு கிடைத்தனர். அதே​நேரத்​தில் 2014, 2024 மக்​கள​வைத் தேர்தல்களில் தனித்து போட்டியிட்ட மா​யா​வ​திக்​கு ஒரு தொகுதியில்​ கூட வெற்​றி கிடைக்கவில்லை.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here