இளம் விஞ்ஞானி தயாரித்த ‘ரூமி ட்வின் மிஷன்’ – ஒரே நேரத்தில் ஏவப்படும் 2 ராக்கெட்கள்!

0
28

தனி​யார் ராக்​கெட் தயாரிப்பு மையத்​தில் தயாரிக்​கப்​பட்ட 2 ராக்​கெட்​​கள் ஒரே நேரத்​தில் நாளை (அக்​.10) விண்​ணில் ஏவப்பட உள்​ளன. ‘ரூமி ட்வின் மிஷன்’ எனப் பெயரிடப்பட்​டுள்ள இந்த திட்​டத்​தின் கீழ் ‘ரூமி 1’, ‘ரூமி 2’ என பெயரிடப்​பட்​டுள்ள 2 ராக்​கெட்​டு​கள் மாமல்​லபுரம் அருகே திருவிடந்​தை​யில் இருந்து ஏவப்​படு​கின்​றன.

‘ஸ்​பேஸ் ஜோன்’ என்ற ராக்​கெட் தயாரிப்பு மையத்தை கேளம்பாக்கம் அடுத்த தையூரில் இளம் விஞ்​ஞானி ஆனந்த் மேகலிங்​கம் நடத்தி வரு​கிறார். கடந்த ஆண்டு பல்​வேறு கட்ட ஆராய்ச்​சிகளுக்​குப் பிறகு இந்த மையம் சார்​பில் முதல் ராக்​கெட் ஏவப்​பட்டு வெற்​றிகர​மாக சோதிக்​கப்​பட்​டது. இதைத் தொடர்ந்​து, ஒரே நேரத்​தில் 2 ராக்​கெட்​டு​களை விண்​ணில் ஏவும் திட்டத்துக்கான ஆய்​வு​கள் கடந்த 2 ஆண்​டு​களாக மேற்கொள்ளப்பட்​டன.

சந்​திர​யான் திட்ட இயக்​குந​ராக இருந்த மயில்​சாமி அண்ணாதுரை​யின் ஆலோ​சனை​யின் அடிப்​படை​யில் இந்த முயற்சி மேற்​கொள்​ளப்​பட்​ட​தாக​ கூறப்​படு​கிறது. இரு ராக்கெட்டுகளும் 100 சதவீதம் உள்​நாட்​டிலேயே உரு​வாக்​கப்​பட்ட ஹைபிரிட் ராக்​கெட் தொழில்​நுட்​பத்​தில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்​சி​யில் தமிழக ஆளுநர் ஆர்.வி.அர்​லேகர் உள்​ளிட்​டோர் பங்​கேற்று வாழ்த்த உள்​ளனர்.

மயில்​சாமி அண்​ணாதுரை, டிஆர்​டிஓ விஞ்​ஞானி மாணிக்​க​வாசகம், இலங்கை முன்​னாள் அமைச்​சர் செந்​தில் தொண்​டமான் உள்​ளிட்​டோரும் கலந்து கொள்​கின்​றனர். கேளம்​பாக்​கத்​தைச் சேர்ந்த ஆனந்த் மேகலிங்​கம், அங்​குள்ள புவனா கிருஷ்ணன் மெட்ரிக் பள்​ளி​யில் பள்​ளிப் படிப்பை முடித்​தார். பின்​னர் தாம்பரம் பாரத் பல்​கலைக்​கழகத்​தில் ராக்​கெட் ஆராய்ச்​சிப் பிரிவில் உயர்​கல்வி பயின்​றார்.

விண்​வெளித் துறை ஆர்​வத்​தின் காரண​மாக சுமார் ரூ.4.5 கோடி முதலீட்​டில் ‘ஸ்​பேஸ் ஜோன்’ மையத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இம்​மை​யத்​தில் 12 ஆராய்ச்சி மற்​றும் சோதனைக் கூடங்​கள் உள்​ளன. 28 இளம் விஞ்​ஞானிகள் பணி​யாற்றி வரும் நிலை​யில், இதன் மூலம் 75 பேருக்கு வேலை​வாய்ப்பு கிடைத்துள்ள​தாக ஆனந்த் மேகலிங்​கம் தெரி​வித்​துள்​ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here