Home சினிமா செய்திகள் ‘நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றாலும் திருப்திதான்’ – ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி

‘நடிப்பில் இருந்து ஓய்வு பெற்றாலும் திருப்திதான்’ – ராஷ்மிகா மந்தனா நெகிழ்ச்சி

0

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வரும் ராஷ்மிகா மந்தனா, பிசியாக இருக்கிறார். அவர் நடித்துள்ள இந்திப் படம், ‘ஜாவா’. வரலாற்றுக் கதையை கொண்ட இதில் விக்கி கவுசல் நாயகனாக நடித்துள்ளார். அக்‌ஷய் கன்னா, அசுதோஷ் ராணா, திவ்யா தத்தா என பலர் நடித்துள்ளனர்.

மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் வாழ்க்கைக் கதையில் இருந்து உருவாகியுள்ள இந்தப் படத்தை லக்‌ஷ்மன் உடேகர் இயக்கியுள்ளார். இதில் ராஷ்மிகா மந்தனா, மகாராணி யேசுபாயாக நடித்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் பிப். 14-ல் வெளியாக இருக்கிறது.

இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய ராஷ்மிகா மந்தனா, “தென்னிந்திய நடிகையான நான் மராட்டிய மகாராணியாக நடித்தது, வாழ்நாளில் கிடைத்த பெரும் வாய்ப்பு. இதை பெருமையாகப் பார்க்கிறேன். இந்தப் படத்துக்குப் பிறகு, நடிப்பிலிருந்து ஓய்வு பெற்றாலும், எனக்கு திருப்திதான் என்று இயக்குநர் லக்ஷ்மனிடம் சொன்னேன். நான் அடிக்கடி அழுகிற நடிகையில்லை. ஆனால் இதன் டிரெய்லரை பார்க்கும்போது இயல்பாகவே எமோஷனலாகி விடுகிறேன்” என்று ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version