Home சினிமா செய்திகள் ‘அரூபி’ விவா​திக்​கப்​படும் படமாக இருக்​கும்: தயாரிப்பாளர் நம்பிக்கை

‘அரூபி’ விவா​திக்​கப்​படும் படமாக இருக்​கும்: தயாரிப்பாளர் நம்பிக்கை

0

ஜாய் மேத்​யூ, வைசாக் ரவி, நேஹா சாவ்​லா, சாக் ஷி பாதலா, சிந்து வர்​மா, கிரண் ராஜ், கண்​ணன் சாகர் உள்பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அரூபி’.

ஹாரர் த்ரில்​ல​ராக உரு​வாகி​யுள்ள இப்​படத்​துக்​குக் கோபி சுந்​தர் இசை அமைத்​துள்​ளார். ஆமன் ஒளிப்​ப​திவு செய்​துள்ள இப்​படத்தை புணர்த்​தம் புரொடக் ஷன் சார்​பாக பிரதீப் ராஜ் தயாரித்துள்​ளார். அபிலாஷ் வாரி​யார் இயக்​கி​யுள்​ளார். மலையாளத்​தில் உரு​வாகி​யுள்ள இப்​படத்​தின் தமிழ்ப் பதிப்புக்கான டிரெய்​லர் மற்​றும் இசை வெளி​யீட்டு விழா சென்னை​யில் நடை​பெற்​றது. படக்​குழு​வினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்​பாளர் பிரதீப் ராஜ் பேசும்​போது, “என் நண்​பரும், இந்​தப் படத்​தின் நாயக​னு​மான விஷாக் ரவி​யுடன் சேர்ந்து இயக்​குநர் என்னிடம் இந்​தக் கதையைச் சொன்​னார். நான் சினிமா துறையைச் சேர்ந்​தவன் அல்ல. ஆனால் கதையைக் கேட்​டதும் பிடித்​தது. என் மனைவி மஞ்​சு​வின் ஆசீர்​வாதத்​துடன் இந்​தப் படத்​தைத் தயாரிக்க முடிவு செய்​தேன். அப்​போது அபிலாஷிடம் ஒரு விஷயம் மட்​டும் சொன்​னேன்.

திறமை​யான இளம் கலைஞர்களைத் தேடி வாய்ப்பு கொடுக்க வேண்​டும் என்​றேன். அதன்​படி செய்​தார். இந்​தப் படத்​தின் மிகப்​பெரிய பலம் அதன் கதை​தான். இந்​தப் படத்​தைப் பார்த்த பிறகு மக்​கள் பேசு​வார்​கள், விவா​திப்​பார்​கள், தங்​களது கருத்​துகளைப் பகிர்ந்து கொள்​வார்​கள் என்று நம்​பு​கிறேன். அதற்​காகவே காத்​திருக்​கிறேன்” என்​றார்​. ஜூலை 3ம் தேதி இப்​படம் தமிழ், மலையாளத்​தில் வெளி வரு​கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version