அர்னாப் புயலால் பாதிக்கப்பட்ட ஒடிசாவில் மீட்புப் பணிகள் தீவிரம்

0
34

அர்னாப் புயல் காரணமாக ஒடிசாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்கள் விநியோகம் செய்யப்படுகிறது.

அர்னாப் புயல் கடந்த புதனன்று கரையைக் கடந்தது. எனினும், ஒடிசா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கஞ்சம், கஜபதி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றனர். இதையடுத்து, வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை ஒடிசா அரசு தீவிரப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொட்டலங்களை விநியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here