தாய்​மாமன் மோதிரம் திட்ட நிபந்தனை தளர்வு

0
13

சுகா​தா​ரத்​துறை செயலர் தாரேஸ் அகமது நேற்று வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தாய்​மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மதுரை ராஜாஜி அரசு மருத்​து​வ​மனை​யில் முதல்​வர் விஜய் கடந்த மாதம் 28-ம் தேதி தொடங்கி வைத்​தார்.

தமிழகத்​தில் நிரந்​தர​மாக வசிக்​கும் தாய்​மார்​கள் இத்​திட்​டத்​தின் கீழ் பயனடை​வார்​கள் என்று தெரிவிக்​கப்​பட்​டிருந்​தது. இத்திட்டத்தின் நிபந்​தனை​களை தளர்த்த அரசு முடிவு செய்துள்ளது. புதிய வழி​காட்​டு​தலின்​படி, தமிழகத்​தி​லுள்ள அரசு மருத்​து​வ​மனை​களில் பிறக்​கும் குழந்​தை​யின் தாய் தமிழகத்​தில் பிறந்​து, திரு​மண​மாகி வெளி​மாநிலம் சென்​றிருந்​தா​லும், அத்தாயின் தாய்- தந்​தையர் இரு​வரும் தமிழகத்​தில் நிரந்​தர​மாக வசிப்​பவர்​களாக இருந்​து, அதற்​குரிய ஆவண ஆதா​ரங்​கள் சமர்ப்பிக்​கப்​பட்​டால், அவரது குழந்​தைக்​கும் தங்க மோதிரம் வழங்​கப்​படும்.

அதன்​படி, காரைக்​குடி அரசு தலைமை மருத்​து​வ​மனை​யில் பிரசவித்த உமா மகேஸ்​வரி என்ற பெண்​ணின் குழந்​தைக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்​டத்​தின் கீழ் ஒரு கிராம் தங்க மோதிரம், அக்​டோபர் 7-ம் தேதி (நேற்​று) வட்​டார மருத்​துவ அலு​வல​ரால் வழங்​கப்​பட்​டது. இந்த திருத்​தம், கடந்த ஜூன் 22-ம் தேதி முதல் அரசு மருத்​து​வ​மனை​யில் பிறந்த குழந்​தைகளுக்கு பொருந்தும்​.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here