உக்ரைன் போருக்கு ஆட்கள் தேர்வு: 2 ரஷ்யர்கள் உட்பட 3 பேர் கைது

0
210

உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா நடத்தி வரும் போரில் கேரளாவின் திருச்சூர் மாவட்டம் வடக்கஞ்சேரியை சேர்ந்த டி.பி.சுனில் என்பவர் உயிரிழந்தார். அவரது உறவினர் டி.கே.ஜெயின் படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து இருவரின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கில் திருச்சூரின் தையூரை சேர்ந்த சிபி ஓசெப், எர்ணாகுளத்தை சேர்ந்த சந்தீப் தாமஸ், சாலக்குடியை சேர்ந்த சுமேஷ் ஆன்டனி ஆகிய 3 பேரை போலீஸார் பல்வேறு பிரிவுகளின் கீழ் கைது செய்துள்ளனர்.

இவர்களில் சிபி, சந்தீப் ஆகிய இருவரும் ரஷ்ய குடியுரிமை பெற்றுள்ளதாகவும் விசாவில் இந்தியா வந்ததாகவும் கூறியுள்ளனர். இதன் உண்மைத்தன்மையை போலீஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here