புகழ்பெற்ற இந்தியத் தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா காலமானார். அவருக்கு வயது 86. அவரது மறைவிற்கு தொழிலதிரும், மெட்ரையிட் நிறுவன தலைவருமான டாக்டர் சுஜின் ஜெகேஷ் அறிக்கை மூலம் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துளார். அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது; இந்தியாவில் வசிக்கும் நடுத்தர மக்களின் கார் வாங்கும் கனவை நிறைவேற்றவே ஒரு இலட்சம் ரூபாய் விலையுள்ள டாட்டா நானோ காரை பல்வேறு சவால்களுக்கிடையே அறிமுகப்படுத்தினார் ரத்தன் டாடா. தனது பணிவு, இரக்கம், மற்றும் நமது சமூகத்தை சிறந்ததாக்குவதற்கான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு கொண்டவர் ரத்தன் டாடா.
டாடா குழுமத்தின் தலைவராக ரத்தன் டாடா இருந்த காலத்தில், ஆங்கிலோ-டச்சு எஃகு உற்பத்தியாளர் கோரஸ், பிரிட்டனைச் சேர்ந்த கார் பிராண்டுகளான ஜாகுவார், லேண்ட் ரோவர், மற்றும் உலகின் இரண்டாவது பெரிய தேயிலை நிறுவனமான டெட்லி ஆகியவை உட்பட பல பெரிய நிறுவனங்களை டாடா குழுமம் தன்வசப்படுத்தியது. இத்தகைய ஆளுமை மிகுந்த ஒரு தொழிலதிபராக இருந்தாலும் எளிமையின் சிகரமாக திகழ்ந்தவர். “தோற்பது அல்ல, முயற்சியே எடுக்காமல் இருப்பதுதான் மிகப்பெரிய தோல்வி”, போன்ற ரத்தன் டாடாவின் பொன்மொழிகள் இன்னும் பலநூறு ஆண்டுகள் வருங்கால தலைமுறையினருக்கு வழிகாட்டும். தனது வருமானத்தின் பெரும்பகுதியை ஏழை மக்கள், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகளின் நலத்திட்டங்களுக்காக கொடையாக வழங்கிய ரத்தன் டாடாவின் மறைவு நம் அனைவருக்கும் ஒரு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஆகும் என தனது அறிக்கையில் டாக்டர் சுஜின் ஜெகேஷ் தெருவித்துளார்.