கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களுக்கு சற்று நிம்மதி ஏற்பட்டதுடன், மாவட்டத்தின் பல பகுதிகளிலும் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அக்டோபர் 1-ம் தேதி வெளியிட்ட எச்சரிக்கையிலும், கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக நிலவிய கடும் வெப்பத்தால் பொதுமக்கள் சிரமமடைந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் வெப்பநிலை குறைந்து இதமான வானிலை ஏற்பட்டுள்ளது. மழையைத் தொடர்ந்து சாலைகளிலும் குடியிருப்பு பகுதிகளிலும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
