Home சினிமா செய்திகள் “என்னை கலைஞனா பார்த்தா போதும்” – ஃபஹத் பாசில் சிறப்பு நேர்காணல்

“என்னை கலைஞனா பார்த்தா போதும்” – ஃபஹத் பாசில் சிறப்பு நேர்காணல்

0

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்​தோட கதையை கேட்​டதும் எனக்கு புதுசா இருந்​தது. இப்​படி ஒரு கதையை, முதல் முறையா கேட்​கிற மாதிரி உணர்ந்​தேன். இதுக்கு முன்​னால இந்த மாதிரி ஒரு கதையைக் கேட்​டதோ அதுல நான் நடிச்​சதோ இல்​லை. நாம சின்ன வயசுல பார்த்த ‘அஞ்​சலி’, ‘மை டியர் குட்​டிச்சாத்​தான்’ போன்ற படங்​களை இது ஞாபகப்​படுத்​தும்.

கதை கேட்​டப்போ என்​னோட சிறு​வயது ஞாபகம்​தான் வந்​துச்​சு. அதுல அழகும் உண்​மை​யும் இருந்​தது. குழந்​தைகளுக்கு ஏற்ற முழுநீள படத்​துல நான் நடிச்சதில்​லை. இது குழந்​தைகளுக்​கான படமாக​வும் இருக்​கும், பெரிய​வங்களுக்​குள்ள இருக்​குற குழந்​தைகளுக்​கும் பிடிக்​கும். இந்​தப்​படத்​துல பெண் குழந்​தை​தான் மெயின் டிரபுள். அவளை தொந்​தரவு செஞ்சா என்ன ஆகும்னு கதை போகும். அந்த குழந்​தையா சாரா அற்​புதமா நடிச்​சிருக் காங்க” என்​கிறார் ஃபஹத் பாசில்.

ஷஷாங்க் யெலெட்டி தெலுங்​கில் இயக்​கி​யுள்ள இந்த ஃபேன்​டஸி படம் தமிழ், மலை​யாள மொழிகளி​லும் நாளை (அக்​.2) வெளி​யாகிறது. இதன் புரமோஷனுக்​காக சென்னை வந்​திருந்த ஃபஹத் பாசிலிடம் பேசினோம்.

Q

நீங்க அழுத்​த​மான, சீரியஸான கதா​பாத்​திரங்​கள்​ல​தானே நடிப்​பீங்க?

A

அப்​படின்னு இல்​லை. எல்லா வகை படத்​துல​யும் நடிப்​பேன். இந்த படத்​துல​யும் சீரியஸான அம்​சங்​களும் இருக்​கு, கதையோட நகர்​வுல அது வரும். கதை​யில நான் மேஜிசி​ய​னாக​வும் வரு​வேன். ஏமாற்​றுக்​காரனாக​வும் இருப்​பேன். ரசிக்​கறதுக்கு நிறைய விஷ​யங்​கள் இருக்​கு. கேரளா​வுல நாங்க மலை​யாளப் படங்​களை செட் போட்டு எடுக்​கிற பழக்​கமில்​லை, நிஜ இடங்​கள்​ல​தான் எடுப்​போம்.

இந்​தப் படத்​துக்கு அது கொஞ்​சம் சிரமமா இருந்​தது. ஹைத​ரா​பாத் சாலைகள்ல, சார்​மி​னார் மாதிரி கூட்​டம் அதி​கம் உள்ள பகு​தி​கள்ல பகல், இரவுன்னு பல நேரங்​கள்ல, ஷூட் பண்​ணினது புது அனுபவமா இருந்​தது. முதல்ல கூட்​டத்தை கட்​டுப்​படுத்​தறது நாங்க நினைச்ச மாதிரி எளிதா இல்​லை. அப்​புறம் கூட்​டம் குறை​வான இடங்​கள்ல படப்​பிடிப்பை நடத்​தினோம்.

Q

‘ஆவேஷம்’ மாதிரி படங்​கள்ல நடிச்​சிட்டு மற்ற மொழிகள்ல சாதாரண கேரக்​டர் பண்​ணும்​போது உங்​களுக்கு தீனி இல்​லாத மாதிரி நினைக்கிறீங்​களா?

A

இல்​லை. என்​னைப் பொறுத்​தவரை எது​வுமே இல்​லாத சாதாரண கேரக்​டர்ல நடிக்​கிறது​தான் கஷ்டம். ‘ஆவேஷம்’ மாதிரி​யான ஒரு கேரக்​டர் பண்​றது எனக்கு ரொம்ப ஈஸி. ஆனா, இந்த மாதிரி கதா​பாத்​திரத்​துல ரொம்ப இயல்பா என்​னைக் காட்​ட​ணும். அதே நேரத்​துல மக்​களை என்னை விரும்ப வைக்​கணும். அது​தான் சவால்.

Q

மொழி தெரி​யாம நடிக்​கிறது கஷ்டமா இருந்​த​தா?

A

கஷ்டம்​தான். ஏன்​னா, என் சிந்​தனை மலை​யாளத்​துல​தான் இருக்​கும். ஒரு டயலாக் சொன்னா அதை மலை​யாளத்​துல​தான் நான் யோசிப்​பேன். பிறகு அதை தெலுங்​குல பேசுவேன். முதல்ல எனக்கு கஷ்டமா இருந்​தது. இயக்குநர் ஷஷாங்க் என் கூட ஒரு மாசம் இருந்து உதவி பண்​ணி​னார். நானே தெலுங்​கு, தமிழ்ல டப்​பிங் பேசி​யிருக்​கேன். நல்லா பேசியிருக்கேன்னு நினைக்​கிறேன்.

Q

இந்​தப் படத்​துக்கு ஆஸ்​திரேலிய ஒளிப்​பதி​வாளர் பிராட் பிரான்​சிஸ் ஏன்?

A

இந்​தக் கதைக்கு ஒரு குறிப்​பிட்ட மூட் உரு​வாக்​கணும்னு இயக்​குநர் விரும்​பி​னார். அதுக்​காக ஒளிப்​ப​தி​வாளர் பிராட்​-டை தேர்வு பண்​ணி​னார். அவர் ஏற்​கெனவே பண்​ணிய படங்​களைப் பார்த்து அவரை இந்​தப் படத்​துல பயன்​படுத்த நினைச்​சார். அவர் ரொம்ப பிசி​யான ஒளிப்​ப​தி​வாளர். இந்​தப் படம் பண்​ணும்போது ஃபிரியா இருந்​த​தால சம்​ம​திச்​சார். இந்​தப் படத்​துக்​காக 120 நாட்​கள் ஷூட் பண்​ணினோம்.

Q

உங்க அப்பா பாசில், தமிழ்ல நல்ல படங்​கள் இயக்கி இருக்​கார்​… நீங்க ஏன் டைரக் ஷன் பக்​கம் வரலை?

A

அதுக்கு திறமை வேணும். எனக்கு அது இல்​லை. அதனால நடிப்​போட, படங்​கள் தயாரிச்​சுட்டு இருக்​கேன். இப்போ அவர் நிறைய படங்​கள் பார்த்​துட்டு இருக்​கார். நான் தயாரிச்ச ‘பெத்​ல​கேம் குடும்ப யூனிட்’ படத்​தைப் பார்த்​து, இது கண்​டிப்பா பிளாக் பஸ்​டர்னு முதல்ல சொன்​னவர் அவர்​தான். அவரும் நல்ல கதைகள் வச்​சிருக்​கார். நான் கேட்டா தரமாட்​டேங்​கிறார்.

Q

ஹீரோ, வில்​லன்னு நடிச்​சுட்டு வர்​றீங்​களே… உங்​களுக்கு எது பிடிச்சிருக்​கு?

A

ஹீரோ, வில்​லனைத் தாண்டி நான் ஒரு கலைஞன். எனக்கு அது​தான் பிடிச்​சிருக்​கு. என்னை அப்​படிப் பார்த்தா போதும். இரண்டு கதா​பாத்திரங்​கள்​ல​யும் நடிக்​கிறது கஷ்டம்​தான். ஒரு கதை​யில அது எப்​படி வருதுங்கறது முக்​கி​யம். ‘கும்​பளங்கி நைட்​ஸ்’ படத்​துல நடிச்​சிருந்​தேன். அதுல நடிச்​சது எனக்கு ரொம்ப கஷ்டம். சில ரோல்​களுக்கு நிறைய மெனக்​கெட வேண்​டி​யிருக்​கும்.

Q

அடுத்து என்ன படங்கள்?

A

மலை​யாளத்​துல ‘கராத்​தே சந்​திரன்’​ பண்​றேன். தமிழ்​ல பிரேம்​ இயக்​குற படத்​துல நடிக்​கப்​ போறேன்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version