Home சினிமா செய்திகள் “வன்​முறை படங்களைத்​தான் உருவாக்குகிறார்கள்” – இயக்குநர் தங்​கர் பச்சான் ஆதங்கம்

“வன்​முறை படங்களைத்​தான் உருவாக்குகிறார்கள்” – இயக்குநர் தங்​கர் பச்சான் ஆதங்கம்

0

விஜய் ஆண்​டனி, ப்​ரித்தி அஸ்ராணி, பேபி லிதன்யா உள்​பட பலர் நடித்​துள்ள திரைப்​படம், ‘அப்பா குட்டி’. மு.மாறன் எழுதி இயக்​கி​யுள்ள இப்​படம் நாளை வெளியாகிறது. இப்​படத்​துக்​கான விளம்​பர நிகழ்ச்சி சென்​னை​யில் நடை​பெற்​றது. விழா​வில் படக்​குழு​வினருடன் இயக்​குநர்​கள் தங்​கர்​பச்​சான், சசி உள்​பட பலர் கலந்​து​கொண்​டனர்.

இயக்​குநர் தங்​கர் பச்​சான் பேசும்​போது, “தமிழ்​நாட்​டில் உரு​வாகும் படங்​களுக்​குத் தமிழ்ப் பெயர்​கள் வைக்​கப்​படுவது மிகவும் அவ​சி​யம். ஆனால் வாரத்​துக்கு வெளியாகும் 10 படங்​களில் 2 படங்​களுக்​குக் கூட தமி​ழில் பெயர் இருப்​ப​தில்லை. இது​குறித்து யாரும் கவலைப்​படுவ​தாகத் தெரிய​வில்லை.

மக்​களு​டைய பணம் மட்​டும் வேண்​டும் என்று நினைப்​பது வருத்​தமளிக்​கிறது. முன்பு கருணாநிதி ஆட்​சி​யில் தமிழ்ப் பெயர்​களை ஊக்​கு​விப்​ப​தற்​காக வரிச்​சலுகை வழங்​கப்​பட்​டது. இப்​போது இந்த விஷயத்​தில் அரசுகள் கவனம் செலுத்து​கின்​றனவா என்று தெரிய​வில்லை. இது அவ​மானமாகவும் வேதனையாகவும் இருக்​கிறது.

இன்​றைய மனித வாழ்க்கை உறவு​களைக் கடந்து பணத்​தைத் தேடி ஓடிக்​கொண்​டிருக்​கிறது. நாம் நேசிப்​பவர்​களு​டன் 5 நிமிடங்​கள் அமர்ந்து பேசக்​கூட நேரமில்​லாமல் கைபேசி​யுடன் வாழ்ந்து கொண்​டிருக்​கிறோம். அத​னால்​தான் ‘அப்பா குட்டி’ போன்ற திரைப்​படங்​கள் இன்​றைய கால​கட்​டத்​தில் மிகவும் முக்​கியம். குறிப்​பாக, குழந்​தைகளை மைய​மாகக் கொண்ட திரைப்​படங்​கள் உலக அளவில் குறைந்து விட்​டன. குழந்​தைகள் தங்​களு​டைய மகிழ்ச்​சி​யைப் பெற்​றோரின் கைபேசிகளில் தேடிக்​கொண்​டிருக்​கிறார்​கள்.

இவற்​றைப் பேசுவதற்​கான கலை​தான் திரைப்​படக் கலை. ஆனால் இன்​றைக்கு நம்​மிடம் இருக்​கும் நவீன கேம​ராக்​கள், ஒளி, ஒலி உள்​ளிட்ட தொழில்​நுட்​பங்​களைப் பெரும்​பாலும் வன்​முறையைக் காட்​சிப்​படுத்​தவும், போதைப்​பொருள் கடத்​தல், மது அருந்​து​தல் போன்​றவற்றை வித​வித​மாகக் காட்​ட​வும் பயன்​படுத்து​கிறோம்.

அப்​படிப்​பட்ட படங்​கள் எத்​தனை கோடி வசூல் செய்​கின்​றன என்று எழுதுகிறோம். அந்​தப் பணத்​தால் சமூகத்​துக்கு என்ன பயன்? மீண்​டும் மீண்​டும் அதே போன்ற படங்​களைத்​தான் உரு​வாக்​கு​கிறார்​கள். அதற்​குப் பதிலாக, மக்​களிடம் உறவு​களை​யும் அன்​பையும் பேசக்​கூடிய திரைப்​படங்​கள் கவனிக்​கப்​பட வேண்​டும். இவ்​வாறு தங்​கர் பச்​சான் கூறினார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version