Home சினிமா செய்திகள் ‘டோரதி’ கதை திருட்டு: கார்த்திக் சுப்புராஜ் மீது போலீஸில் புகார்

‘டோரதி’ கதை திருட்டு: கார்த்திக் சுப்புராஜ் மீது போலீஸில் புகார்

0

‘டாட் நங்​கை’ என்ற தனது குறும்​படத்​தின் கதையைத் திருடி ‘டோர​தி’ படத்தை இயக்​கிய கார்த்​திக் சுப்​பு​ராஜ், மற்​றும் தயாரிப்பு நிறு​வனம் மீது நடவடிக்கை எடுக்​கக் கோரி குறும்பட இயக்​குநர் மதுரை மைந்​தன் என்ற முகமது செரிப், மதுரை மாநகர காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் மனு அளித்​துள்​ளார்.

அந்த மனு​வில், “கரோனா கால​கட்​டத்​தில் ‘டாட் நங்​கை’ என்ற பெயரில் திருநங்​கைகள் குறித்த 3 நிமிட குறும்​படத்தை தயாரித்​தேன். இதை சமூக வலை​தளங்​களில் பதி​விட்​ட​போது ஏராள​மானோரின் கவனத்தை ஈர்த்​தது. இக்​கதையை திரைப்​பட​மாக தயாரிக்க முயற்​சித்த நிலை​யில், தாமதம் ஏற்​பட்​டது.

இந்​நிலை​யில், சமீபத்​தில் வெளி​யான ‘டோர​தி’ படத்தை பார்த்த சிலர், எனது குறும்​படத்​தின் கதை​போல் இருப்​ப​தாகத் தெரி​வித்​தனர். படத்தை பார்த்​த​போது, எனது குறும்பட கதைக்​கருவை என் அனு​ம​தி​யின்றி பயன்​படுத்தி கார்த்​திக் சுப்​பு​ராஜ் ‘டோர​தி’ படத்தை இயக்கி வெளி​யிட்​டிருப்​பது தெரிய வந்​தது. சம்​பந்​தப்​பட்ட திரைப்பட இயக்​குநர் மற்​றும் தயாரிப்பு நிறு​வனம் மீது சட்ட ரீதி​யாக நடவடிக்கை எடுக்க வேண்​டும்” என தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் கூறுகை​யில், ‘டோரதி திரைப்​படத்​தின் இறு​திக்​காட்​சிகள் என் குறும்​படத்​துடன் ஒத்​துப்​போகின்​றன. எனது குறும்​படத்​தில் நடித்த மதுரை பெண் ஒரு​வர் டோர​தி​யிலும் நடித்​துள்​ளார். எனது கதைக்​கான அங்​கீ​காரம் வேண்​டும். போலீ​ஸார் உரிய நடவடிக்கை எடுக்​கா​விட்​டால் நீதி​மன்​றத்​தை அணுகு​வேன்​’ என்​று கூறி​னார்​.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version