Home தேசிய செய்திகள் பிரதமர் இல்லத்தின் முன்பு ராகுல் திடீர் போராட்டம்

பிரதமர் இல்லத்தின் முன்பு ராகுல் திடீர் போராட்டம்

0

பிரதமர் மோடி​யின் அரசு இல்​லத்​தின் முன்பு ராகுல் காந்தி தலை​மை​யில் காங்​கிரஸ் கட்​சி​யினர் நேற்று திடீரென போராட்​டம் நடத்​தினர்.

நீட் வினாத்​தாள் கசிவுக்கு பொறுப்​பேற்று மத்​திய கல்வி அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் பதவி விலக வலி​யுறுத்​தி, டெல்​லி​யில் நாடளு​மன்​றத்தை முற்​றுகை​யிடு​வதற்​காகக் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் பேரணி சென்​றனர். அவர்​களைப் போலீ​ஸார் தடியடி நடத்​தி​யும் கண்​ணீர் புகைக்​குண்​டு​களை வீசி​யும் கலைத்​தனர்.

இந்​நிலை​யில், போராட்​டத்​தில் ஈடு​பட்​டுள்ள மாணவர்​களுக்கு ஆதர​வாக மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வர் ராகுல் காந்தி தலை​மை​யில் காங்​கிரஸ் கட்சி​யினர் நேற்று ராஜாஜி மார்க் பகு​தி​யில் இருந்து பிரதமர் இல்​லம் அமைந்​துள்ள எண்​.7, லோக் கல்​யாண் மார்க் நோக்கி பேரணி சென்​றனர்.

காங்​கிரஸ் தேசிய தலை​வர் மல்​லி​கார்​ஜுன கார்​கே, பிரி​யங்கா காந்​தி, கே.சி.வேணுகோ​பால், பவன் கேரா உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள், கேரள முதல்​வர் வி.டி.சதீசன் மற்​றும் கட்சி எம்​.பி.க்​கள் பேரணி​யில் பங்​கேற்​றனர். பின்​னர் பிரதமர் இல்​லத்​துக்கு வெளியே அவர்கள் போராட்​டம் நடத்​தினர். அப்​போது, மாணவர்​கள் மீதான தாக்​குதலுக்​குப் பொறுப்​பேற்று பிரதமர் மோடி, உள்​துறை அமைச்​சர் அமித் ஷா, அமைச்​சர் தர்​மேந்​திர பிர​தான் ஆகியோர் பதவி விலக வேண்​டும் என்று வலி​யுறுத்தி கோஷமிட்​டனர்.

இதுகுறித்து ‘எக்​ஸ்’ தளத்​தில் ராகுல் காந்தி வெளி​யிட்ட பதி​வில், “இளம் மாணவர்​கள் மீது நடத்​தப்​பட்ட கொடூர​மான தாக்​குதலுக்​குப் பிரதமர் மோடி​யிடம் இருந்து விளக்​கம் கேட்​கவே நாங்​கள் அவரது இல்​லம் நோக்கி பேரணி​யாகச் சென்​றோம். இந்​திய இளைஞர்​களின் எதிர்​காலத்தை சீரழித்​ததற்​காகப் பிரதமரும் உள்​துறை அமைச்​சரும் ராஜி​னாமா செய்ய வேண்​டும்’’ என்று கூறி​யுள்​ளார்.

இதற்​கிடை​யில், பிரதமர் வீட்டு முன் போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்த ராகுல் காந்​தியை மத்​திய அமைச்​சர்​கள் ஜிதேந்​திர சிங், பியூஷ் கோயல் ஆகியோர் சந்​தித்து போராட்​டத்தை முடித்து கொள்ள வேண்​டும் என கேட்​டுக் கொண்​டனர்.

அதேவேளை​யில் தொடர்ந்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டிருந்த மூத்த தலை​வர்​கள் ராகுல், பிரியங்கா உள்​ளிட்ட காங்​கிரஸ் கட்​சி​யினரைப் போலீ​ஸார் கைது செய்து பேருந்​துகளில் ஏற்​றிசென்றனர். அப்போது ராகுல் காந்தியின் மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. தகவல் அறிந்து மந்திர் மார்க் போலீஸ் நிலையத்துக்கு சோனியா காந்தி விரைந்து சென்றார்.

பின்​னர் ராகுல் உட்பட போராட்டம் நடத்தியவர்​கள் இரவு 10 மணிக்கு விடுவிக்​கப்​பட்​டனர். முன்​ன​தாக நாடாளு​மன்​றத்​துக்கு வெளியே செய்​தி​யாளர்​களிடம் ராகுல் பேசி​ய​தாவது: கல்வி மற்​றும் தேர்வு முறைக்கு எதி​ராக இளைஞர்​கள் போராடி வரு​கின்​றனர்.

பிரதமர் ஏன் மவுன​மாக இருக்​கிறார்? அவர் மாணவர்​களிடம் மன்​னிப்பு கேட்க வேண்​டும். மேலும் மாணவர்​கள் மீது தாக்​குதல் நடத்​தும் அநி​யா​யத்தை நிறுத்த வேண்​டும். இங்கு நடப்​பது இந்​தி​யத் தன்​மைக்கு முரணானது.இவ்​வாறு ராகுல் கூறி​னார்.

கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் மற்றும் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மத்திய அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

2-வது நாளாக நாடாளுமன்றம் முடக்கம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. அப்போது நீட் தேர்வு முறைகேடு, அயோத்தி ராமர் கோயில் நன்கொடை திருட்டு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் எழுப்பின. இதன் காரணமாக முதல் நாளில் நாடாளுமன்றம் முழுமையாக முடங்கியது.

இரண்டாவது நாளான நேற்று காலை 11 மணிக்கு மக்களவை கூடியது. அப்போது நீட் தேர்வு முறைகேடு, சிஜேபி பேரணியில் நடத்தப்பட்ட தடியடி குறித்து எதிர்க்கட்சிகள்கேள்வி எழுப்பி தொடர் அமளியில் ஈடுபட்டன. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறும்போது, ‘‘அவையில் அனைத்து பிரச்சினைகள் குறித்தும் விவாதிக்கலாம். இதற்காக எம்.பி.க்களுக்கு உரிய நேரம் ஒதுக்கப்படும்’’ என்று வாக்குறுதி அளித்தார். எனினும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து கோஷமிட்டனர்.

இதனால் பிற்பகல் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, அமளி தொடர்ந்தது. இதனால் பிற்பகல் 2 மணி வரைஅவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடிய போதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.

மாநிலங்களவை நேற்று காலை 11 மணிக்கு கூடியதும், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசும்போது, “நீட் வினாத்தாள் கசிவு தொடர்பாக மாணவ, மாணவிகள் கேள்வி எழுப்புகின்றனர். அவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டுள்ளது. இதில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் உள்ளனர். அவர்கள் எழுப்பும் பிரச்சினைகள் குறித்து மத்திய அரசு கேட்டறிய வேண்டும்” என்று வலியுறுத்தினார்.

கார்கேவுக்கு ஆதரவாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அனைவரும் கோஷமிட்டனர். தொடர் அமளியால் மதியம் 12 மணிவரை அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடிய போது அமளி நீடித்ததால் பிற்பகல் 2 மணி வரை அவை ஒத்திவைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடிய போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின்இரு அவைகளும் 2-வது நாளாக நேற்றும் முடங்கின.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version