Home தேசிய செய்திகள் தேர்தல் ஆணைய விவகாரத்தில் சமூகத்துக்கு தவறான தகவலை தருகிறார் ராகுல்: கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

தேர்தல் ஆணைய விவகாரத்தில் சமூகத்துக்கு தவறான தகவலை தருகிறார் ராகுல்: கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு

0

தேர்​தல் ஆணைய விவ​காரத்​தில் மக்​களவை எதிர்க்கட்சி தலை​வர் ராகுல் காந்தி சமூகத்​துக்கு தவறான தகவலை தரு​கிறார் என மத்​திய அமைச்​சர் கிரண் ரிஜிஜு குற்​றம் சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து மத்திய நாடாளு​மன்ற விவ​காரங்​கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியதாவது: மக்​களவை எதிர்க்​கட்சி தலை​வர் ராகுல் காந்தி இந்தி​யத் தேர்​தல் ஆணை​யம் மீது வைக்​கும் விமர்​சனங்​களும், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்​டும் என்ற அவரது கோரிக்​கை​யும் சமூகத்​துக்​குத் தவறான தகவலைக் கொண்டு சேர்க்​கும்.

ராகுல் காந்தி இது​போன்ற கருத்​துகளைப் பொது​வெளி​யில் பெரிதுபடுத்​து​வது சரி​யான நடவடிக்கை அல்ல; அது சமூகத்துக்குத் தவறான தகவலையே பரப்​பும். வாக்​காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்​தப் பணி (எஸ்​ஐஆர்) தொடர்​பாக மத்திய அரசை​யும் தேர்​தல் ஆணை​யத்​தை​யும் ராகுல் காந்தி தீவிர​மாக விமர்​சித்து வரு​வது துர​திர்​ஷ்ட​வச​மானது. இவ்​வாறு ரிஜிஜு கூறி​னார்.

முன்​ன​தாக பத்​திரி​கை​யாளர் சந்​திப்​பில் பேசிய ராகுல் காந்​தி, 2024 மக்​கள​வைத் தேர்​தல் மற்​றும் அதன் பிறகு நடை​பெற்ற சட்டப்​பேரவை தேர்​தல்​கள் முறை​கே​டாக நடத்​தப்​பட்​டவை என்றும், வாக்​காளர்​களின் உரிமை​களைப் பாது​காக்​கத் தவறிய தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமார் உடனடி​யாகப் பதவி விலக வேண்​டும் என்​றும் வலி​யுறுத்​தி​யது குறிப்பிடத்தக்கது. இதற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடியும், அமித் ஷாவும் பதவி விலக வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version