ஆஸி.க்கு எதிரான தொடரில் காயம் காரணமாக ரபாடா விலகல்

0
11

தென் ஆப்​பிரிக்கா – ஆஸ்​திரேலியா அணி​கள் இடையி​லான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி தொடர் வரும் செப்​டம்​பர் 24-ம் தேதி டர்​பன் நகரில் தொடங்​கு​கிறது.

இந்​நிலை​யில் ரபா​டாவுக்கு ஒரு வாரத்​துக்கு முன்​னர் தொடை​யில் காயம் ஏற்​பட்​டது. அவர், முழு உடற்​தகு​தி​யைப் பெறு​வதற்கு குறைந்​தது நான்​கரை வாரங்​கள் ஓய்​வெடுக்க வேண்​டிய சூழல் உரு​வாகி​யுள்​ளது.

இது குறித்து தென் ஆப்​பிரிக்க கிரிக்​கெட் வாரி​யம் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை​யில், “காகிசோ ரபா​டாவுக்கு வலது தொடை​யில் காயம் ஏற்​பட்​டுள்​ளது. இதில் இருந்து மீள்​வதற்​காக அவர், மருத்​து​வக் குழு​வின் தீவிர மேற்​பார்​வை​யில் தொடக்​கக்​கட்ட மறு​வாழ்வு பயிற்​சியை பெற்று வரு​கிறார்.

இதனால் வரும் செப்​டம்​பர் 24 முதல் 30 வரை நடை​பெறவுள்ள ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான 3 ஆட்​டங்​கள் கொண்ட ஒரு​நாள் போட்​டித் தொடரில் ரபாடா கலந்​து​கொள்​ள​மாட்​டார். ஆஸ்​திரேலி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடரில் அவர், பங்​கேற்​பது, உடற்​தகு​தியை பொறுத்தே அமை​யும். டெஸ்ட் தொடர் நெருங்​கும் போது இது குறித்து முடிவு எடுக்​கப்​படும்” என்று தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here