பேச்சிப்பாறையில் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி உள்ளது. நேற்று முன் தினம் இரவு பள்ளி வளாகத்தில் இருந்து மலை பாம்பு ஒன்று வெளியே வந்து, சாலையை கடந்த பாம்பு பாக்கியதாஸ் என்பவர் வீட்டு வளாகத்தில் சென்றுள்ளது. இதை பார்த்த அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். பாம்பு அங்கிருந்து இருள் சூழ்ந்த பகுதிக்கு செல்ல முயன்றதால் பொதுமக்கள் பாம்பை பிடித்து அங்கு வந்த வனத்துறையிடம் பாம்பை ஒப்படைத்தனர். வனத்துறையினர் பாம்பை காட்டு பகுதியில் விட்டனர்.
