புதுக்கடை: தமிழக வாழ்வுரிமை கட்சியின்  வாகன பேரணி

0
294

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மே 18 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு நீதி கோரி நேற்று குமரி மாவட்டம், புதுக்கடை மொழிபோர் தியாகிகள் நினைவு ஸ்தூபியில் இருந்து இருசக்கர வாகன பேரணி தொடங்கியது. இந்த இருசக்கர வாகன பேரணி தொடக்க நிகழ்ச்சிக்கு தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை தலைவர் சோ. சுரேஷ் மற்றும் கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் பிரனேஷ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். 

கிள்ளியூர் தொகுதி நிர்வாகி ஜார்ஜ் அமல்ராஜ் வரவேற்புரை ஆற்றினார். நாகர் சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் நாகராஜன், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் தமிழ்செல்வன், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி அமைப்பாளர் ரூபின் ஆன்டனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த பேரணியை மாநில நிர்வாகி வெற்றிகுமரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக புதுக்கோட்டை தனசேகரன், வழக்கறிஞர் அனிட்டர் ஆல்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். வாகன பேரணி களியக்காவிளை மார்த்தாண்டம் தக்கலை நாகர்கோவில் வழியாக நெல்லை சென்றது. இந்த இருசக்கர வாகன பேரணி மே 18ம் தேதி செஞ்சி கோட்டையை சென்றடைகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here