புதுக்கடை அருகே மாடச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (68). கூலித் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா (62). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். சம்பவ தினம் மாலை விஜயன் புதுக்கடைக்குச் சென்றுவிட்டு, மீண்டும் வீட்டில் வந்து பார்த்தபோது, சரோஜாவை காணவில்லை. அக்கம் பக்கத்தில் விசாரித்தும் அவர் தொடர்பாக எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. சரோஜா கழுத்தில் தாலி உட்பட சுமார் 8 பவுன் நகைகள் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் நேற்று (19-ம் தேதி) வழக்குப் பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் ஜானகி விசாரித்து வருகிறார்.