Home கன்னியாகுமரி செய்திகள் புதுக்கடை: 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

புதுக்கடை: 700 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்

0

புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகள் வழியாக படகுகளுக்கு மானிய விலையில் வழங்கும் மண்ணெண்ணெய் கேரளாவுக்கு கடத்தபபடுவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் நேற்று (17-ம் தேதி) மாலை இனயம் அருகேயுள்ள ஹெலன் நகர் பகுதியில் மானிய விலை மண்ணெண்ணெய் கடத்தப்படுவதாக புதுக்கடை போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ஜோஸ் என்பவருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.  

இதையடுத்து புதுக்கடை இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் அந்த பகுதியில் சென்று விசாரித்தனர். அப்போது ஒரு பொலீரோ வாகனத்தை கண்டு நிறுத்தினர். போலீசை கண்டதும் வாகனத்தில் இருந்தவர்கள் இறங்கி ஓடிவிட்டனர்.  

போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து சோதனையிட்ட போது, அதில் 20 கேன்களில் 700 லிட்டர் மண்ணெண்ணெய் காணப்பட்டது. அதை வாகனத்துடன் போலீஸ் நிலையம் கொண்டு வந்து, மாவட்ட புட்செல் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version