கருங்கல் பகுதியைச் சேர்ந்த ஐயப்பன் (52) என்பவருக்குச் சொந்தமான மொபைல் கடையில் வேலை பார்த்த அபிஷேக் (22) மற்றும் அபிஷ் (27) ஆகியோர், கடை காசோலைகளைப் பயன்படுத்தி சுமார் ரூ. 1 கோடி கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். வெளிநாட்டிலிருந்து திரும்பிய உரிமையாளர் ஐயப்பன் இந்த மோசடியைக் கண்டுபிடித்து குமரி மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் அபிஷ் என்பவரை கைது செய்துள்ளனர்.
