அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்க 62 லட்சம் ‘ஸ்பாஞ்ச் கேக்’ கொள்முதல்: தமிழக அரசு டெண்டர் வெளியீடு

0
33

குழந்​தைகள் தினத்தை முன்​னிட்டு தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்​களுக்கு வழங்​கு​வதற்​காக ரூ.9.27 கோடி​யில் 61.84 லட்​சம் கேக்​கு​களைக் கொள்​முதல் செய்ய தமிழக அரசு டெண்​டர் வெளி​யிட்​டுள்​ளது.

மறைந்த முன்​னாள் பிரதமர் ஜவஹர்​லால் நேரு​வின் பிறந்த நாளான நவ.14-ம் தேதி ஆண்​டு​தோறும் குழந்​தைகள் தின​மாக கொண்​டாடப்​படு​கிறது.

இந்​நிலை​யில் நடப்​பாண்டு குழந்​தைகள் தினத்​தையொட்டி தமிழகத்​தில் அரசு மற்றும் அரசு உதவி​பெறும் பள்​ளி​களில் மாணவர்​களுக்கு மதிய சத்​துணவுடன் இனிப்பு வழங்க தமிழக அரசு முடிவு செய்​துள்​ளது.

இதற்​காக தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் மூலம் 61 லட்​சத்து 84,566 ‘ஸ்​பாஞ்ச் கேக்’ துண்​டு​களைக் கொள்​முதல் செய்​வதற்​கான குறுகிய கால டெண்​டர் அறிவிக்​கை​யானது வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

இதுகுறித்து தமிழ்​நாடு நுகர்​பொருள் வாணிபக் கழகம் வெளி​யிட்ட டெண்​டர் அறிவிக்​கை​யில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: மாணவர்​களுக்கு வழங்​கப்​படும் ஒவ்​வொரு கேக்​கும் 45 கிராம் எடை கொண்​ட​தாக, தனித்​தனி உறை​களில் பேக் செய்​யப்​பட்​டிருக்க வேண்​டும்.

ஒரே சுவை​யாக இல்​லாமல் மிக்​ஸ்டு ப்ரூட், கிளாசிக் வெனிலா, ரிச் சாக்​லேட் மற்​றும் பட்​டர்/ மில்க் ஆகிய 4 சுவை​களில் கேக்குகள் வழங்​கப்பட வேண்​டும்.

கேக்​கு​கள் தரமான​தாக, மென்​மை​யாக, பஞ்சு போல இருக்க வேண்​டும். பூஞ்​சை, கெட்​டுப்​போன துர்​நாற்​றம், செயற்கை ரசாயன சுவை இருக்​கக் கூடாது.

டிரான்ஸ் கொழுப்​பு​கள் மற்​றும் தடை செய்​யப்​பட்ட நிறமூட்​டிகள் கேக்குகளில் சேர்த்​திருக்​கக் கூடாது. அதே​போல், பள்​ளி​களில் நவ.14-ம் தேதி​யன்று கேக்​கு​கள் விநி​யோகிக்​கும்​போது, குறைந்​த​பட்​சம் மேலும் 30 நாட்​கள் கெடா​மல் இருக்​கும் வகை​யில் தயாரிக்​கப்​பட்​டிருக்க வேண்​டும். ஈரப்​ப​தம் புகாத தரமான உறை​களில் கேக் பேக்கிங் செய்​யப்​பட்​டிருக்க வேண்​டும்.

உறைக்கு மேல் தயாரிப்​புத் தேதி, காலா​வதி தேதி, உணவு பாது​காப்​புத் துறை (FSSAI) முத்​திரை மற்​றும் தமிழக அரசின் லோகோ கட்​டா​யம் இடம்​பெற வேண்​டும்.

இந்த டெண்​டரில் பங்​கேற்​கும் நிறு​வனங்​கள் என்​ஏபிஎல் அங்​கீ​காரம் பெற்ற ஆய்​வகத்​தில் தரச்​சான்​றிதழ்​களைப் பெற்று சமர்ப்​பிக்க வேண்​டும்.

மேலும், ஆய்​வுக் குழு​விடம் ஒவ்​வொரு சுவை​யிலும் சாம்​பிள் கேக்​கு​களை வழங்கி ஒப்​புதல் பெறு​வது கட்​டா​யம்.

கேக் வழங்குவதற்கான ஒப்​பந்​தம் பெறும் நிறு​வனம், போக்​கு​வரத்​துச் செல​வு​களை ஏற்று டிஎன்​சிசி கிடங்​கு​களுக்கு நேரடி​யாக கேக்​கு​களை பாது​காப்​பாக விநி​யோகிக்க வேண்​டும்.

மேலும், இதுதொடர்​பான கூடு​தல் விவரங்​களை www.tntenders.gov.in என்ற இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here