சையத் அலி முஷ்டாக் டிராபி கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் டெல்லி வீரர் பிரியான்ஷ் ஆர்யா, கே.எல்.ராகுலின் சாதனையை முறியடித்தார்.
டெல்லி, தமிழ்நாடு அணிகளுக்கு இடையிலான இந்த லீக் ஆட்டம் நேற்று இந்தூரில் நடைபெற்றது. முதலில் விளையாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து 276 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தமிழ்நாடு அணி 18.3 ஓவர்களில் 159 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து 116 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி கண்டது.
இந்தப் போட்டியின்போது டெல்லி வீரர் பிரியான்ஷ் ஆர்யா 68 பந்துகளில் 7 பவுண்டரி, 19 சிக்ஸர்களுடன் 181 ரன்கள் குவித்தார். இதன்மூலம் டி20 கிரிக்கெட் போட்டிகளில் அதிகபட்ச ரன்கள் குவித்த இந்திய வீரர் கே.எல்.ராகுலின் சாதனையை பிரியான்ஷ் ஆர்யா முறியடித்தார்.
2026 ஐபிஎல் போட்டியின்போது பஞ்சாப் கிங்ஸ் அணிக்கெதிராக, டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடிய ராகுல் 67 பந்துகளில் 152 ரன்கள் குவித்ததே டி20 போட்டிகளில் இந்திய வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன்களாக இருந்தது. தற்போது 181 ரன்கள் குவித்து இந்த சாதனையை பிரியான்ஷ் ஆர்யா முறியடித்துள்ளார்.












