குமரி மாவட்ட தாட்கோ மூலம் பொன்மனை, கடையால் பேரூராட்சிகளில் 100 பழங்குடியினர் பயனாளிகளுக்கு ரூ. 5 கோடியே 73 லட்சம் மதிப்பில் வீடுகள் கட்டும் பணி நடக்கிறது. இதன் அஸ்திவார பணிகளை மாவட்ட கலெக்டர் அழகு மீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை அலுவலர்களுக்கு அவர் அறிவுறுத்தினார்.
