கன்னியாகுமரி புதுக்கிராமம் பஸ் நிலையம் அருகே இன்று (மே 21) அதிகாலை 3 மணியளவில் அதிவேகமாக வந்த கார் ஒன்று மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மின்கம்பம் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது. காரில் ஆறு பேர் பயணம் செய்த நிலையில், அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நள்ளிரவு நேரமாக இருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
