Home உலக செய்திகள் ‘இஸ்ரேல் விமான நிலையம் மீது விமானத்தை மோத சதி’ – ஓமன் துணை பைலட் வாக்குமூலம்

‘இஸ்ரேல் விமான நிலையம் மீது விமானத்தை மோத சதி’ – ஓமன் துணை பைலட் வாக்குமூலம்

0

அமெரிக்க இரட்டை கோபுர தாக்​குதல் போன்று இஸ்​ரேலின் பென் குரியன் சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் மீது விமானத்தை மோதி மிகப்​பெரிய அளவில் உயி​ரிழப்பை ஏற்​படுத்த சதித் திட்​டம் தீட்​டி​யிருந்​த​தாக ஓமன் துணை பைலட் வாக்குமூலம் அளித்​துள்​ளார்.

கடந்த 30-ம் தேதி ஐக்​கிய அரபு அமீரகத்​தின் துபாய் நகரில் இருந்து இஸ்​ரேலின் டெல் அவிவ் நகரில் உள்ள பென் குரியன் சர்வ​தேச விமான நிலை​யத்​துக்கு ஃபிளை துபாய் விமானம் புறப்பட்​டது. இந்த விமானத்தை நடு​வானில் கடத்த ஓமனைச் சேர்ந்த துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி முயற்சி செய்​தார். இந்​திய தலைமை பைலட் ஸ்மித் மச்​சார் தனது உயிரை பணயம் வைத்து விமான கடத்​தல் முயற்​சியை முறியடித்​தார்​.

ஜூலையில் தாக்குதல் முயற்சி

தற்​போது ஐக்​கிய அரபு அமீரக போலீ​ஸார், துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி​யிடம் தீவிர விசா​ரணை நடத்தி வருகின்றனர். அவர்​களிடம் ஹமாமி அளித்த வாக்​குமூலத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: இஸ்​ரேல் மீது மிகப்​பெரிய தாக்​குதல் நடத்த வேண்​டும் என்​பதே எனது லட்​சி​யம். இதற்​காகவே ஃபிளை துபாய் விமான நிறு​வனத்​தில் பணி​யில் சேர்ந்​தேன். இந்த நிறு​வனம் இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு விமான சேவை​களை இயக்கி வந்​தது. இதைப் பயன்​படுத்தி மிகப்​பெரிய தாக்​குதலை நடத்த மிக நீண்ட கால​மாக திட்​ட​மிட்டு வந்​தேன்.

கடந்த ஜூலை​யில் இஸ்​ரேலின் பென் குரியன் சர்​வ​தேச விமான நிலை​யத்​தின் மீது விமானத்தை மோத திட்​ட​மிட்டு இருந்​தேன். ஆனால் எனது நெருங்​கிய நண்​பர்​கள் விமானத்​தில் இருந்​தனர். அவர்​கள் உயி​ரிழக்​கக்​கூ​டாது என்​ப​தற்​காக கடைசி நேரத்​தில் தாக்​குதல் திட்​டத்தை கைவிட்​டேன். சதித்திட்டத்தை முறியடித்தார். கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்​கா​வின் நியூ​யார்க் நகரில் 110 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரத்​தின் மீது விமானங்​களை மோதி அல்​-​காய்தா தீவிர​வா​தி​கள் தாக்​குதல் நடத்​தினர்.

அதே பாணி​யில் கடந்த செப்​டம்​பர் 30-ம் தேதி இஸ்​ரேலின் சர்​வ​தேச விமான நிலை​ய​மான பென் குரியன் மீது விமானத்தை மோத சதித் திட்​டம் தீட்​டி​யிருந்​தேன். இதற்​காக இந்​திய பைலட் ஸ்மித் மச்​சாரை தாக்கி கொலை செய்​து​விட்டு விமானத்தை எனது கட்​டுப்​பாட்​டின் கீழ் கொண்டு வர முயற்சி செய்​தேன். ஆனால் இந்​திய பைலட் ஸ்மித், காக்​பிட் கதவை திறந்து எனது சதித் திட்​டத்தை முறியடித்​து​விட்​டார்.

வேறு​வழி​யின்றி விமானத்தை தரை​யில் மோதி தகர்க்க முடிவு செய்​தேன். இதற்​காக ஆட்டோ பைலட்டை துண்​டித்​தேன். விமான இன்​ஜின்​களை அணைத்​தேன். விமான கட்​டுப்​பாட்டு கருவி​களை சேதப்​படுத்​தினேன். மணிக்கு 970 கி.மீ. வேகத்​தில் பூமியை நோக்கி விமானம் தரை​யிறங்​கியது. அதற்​குள் இஸ்​ரேல் பயணி​கள் என்னை மடக்​கிப் பிடித்​து​விட்​டனர். விமானத்​தில் இருந்த இரு பைலட்​டு​கள் விமானத்தை மீண்​டும் இயக்கி பத்​திர​மாக தரை​யிறக்​கி​விட்​டனர். இவ்​வாறு ஓமன் துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி தெரி​வித்​துள்​ளார்.

இஸ்​ரேல் பாது​காப்பு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: இஸ்​ரேலின் டெல் அவிவ் நகர் அருகே உள்ள பென் குரியன் சர்​வ​தேச விமான நிலை​யத்தை நாள்​தோறும் சுமார் ஒரு லட்​சம் பயணி​கள் பயன்​படுத்​துகின்​றனர். இதன் பிர​தான பகுதி மீது விமானத்தை மோத துணை பைலட் ஹமாம் அல் ஹமாமி திட்​ட​மிட்டு உள்​ளார்.

இதற்​காக காக்​பிட் அறைக்​குள் இந்​திய விமானி ஸ்மித்தை ரகசியமாக கொலை செய்ய அவர் தீவிர முயற்சி செய்திருக்கிறார். பின்​தலை​யில் கோடாரி​யால் தாக்​கிய​தில் ஸ்மித் நிலைகுலைந்துள்ளார். ஆனாலும் அவர் வீர, தீரத்​துடன் போராடி காக்​பிட் அறைக் கதவை திறந்​த​தால் பேரழிவு தடுக்கப்பட்டு உள்​ளது. ஒரு​வேளை இந்​திய பைலட் உயி​ரிழந்து இருந்​தால், பென் குரியன் விமான கட்​டுப்​பாட்டு அறை​யின் அனு​ம​தியை பெற்று தரை​யிறக்​கு​வது போன்று நடித்து விமானத்தை அதிவேகத்​துடன் மோத துணை பைலட் சதித் திட்​டம் தீட்டியிருந்தார்.

இதை ஒரு விமான விபத்து போல சித்​தரிக்​க​வும் அவர் வியூ​கம் வகுத்​திருந்​தார். இந்​திய வி​மானி ஸ்மித்​தின் வீரம், விவேகத்​தால் மிகப்​பெரிய தீவிர​வாத தாக்​குதல் தடுக்​கப்​பட்​டு இருக்​கிறது. இவ்வாறு இஸ்​ரேல்​ பாதுகாப்​பு வட்​டாரங்​கள்​ தெரிவித்​துள்​ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version