Home கன்னியாகுமரி செய்திகள் சம்பள உயர்வு கேட்டு தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

சம்பள உயர்வு கேட்டு தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டம்

0

நாகர்கோவில்: சம்பள உயர்வு கேட்டு கன்னியாகுமரி மாவட்ட அரசு ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று இரண்டு இடங்களில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததது.

வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரசு ரப்பர் கழகத்தில் 300க்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். 9 மாதங்களாக சம்பள உயர்வு கேட்டு இவர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் நேற்று முதல் இது மேலும் தீவிரமடைந்தது. தோவாளை தாலுகா அலுவலகம் முன் காத்திருப்பு போராட்டத்துக்கு வந்தவர்களை போலீசார் வளாகத்துக்குள் அனுமதிக்கவில்லை.

பின்னர் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் நாகர்கோவிலில் உள்ள ரப்பர் கழக அலுவலகத்தில் நடத்திய பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. தொழிலாளர்கள் கோணத்தில் உள்ள தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கும் அவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை. பின்னர் தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள், அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தியும் சம்பள உயர்வு தொடர்பாக எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இதைத்தொடர்ந்து இன்று (செப்.25) வடசேரியில் உள்ள ரப்பர் கழக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version